இங்கிலாந்தில் பாக். வம்சாவளி எம்.பி. அமைச்சரானார்!!( உலக செய்தி)
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இங்கிலாந்தில் குடியேறிவர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதற்காக தனது உள்துறை அமைச்சர் பதவியை அம்பர் ரூட் நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் அம்பர் ரூட் விலகலை தொடர்ந்து, உள்துறை புதிய அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த எம்பி சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார். 1960களில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்த பேருந்து ஓட்டுனரின் மகன் தான் எம்பி சாஜித் ஜாவித். இங்கிலாந்து அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள முதல் பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் சாஜீத் ஆவார்.