எம்ஜிஆர் படத்தில் அக்ஷரா கவுடா !!(சினிமா செய்தி)
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜிஆர் இயக்கியபோது, அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற படத்தையும் அறிவித்தார். சில காரணங்களால் அந்த படத்தை உருவாக்கவில்லை. இப்போது அந்த படத்தை, எம்ஜிஆர் கேரக்டரை அனிமேஷனில் உருவாக்கி படமாக்கி வருகிறார்கள்.
அதேபோல் ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் கேரக்டர்களும் அனிமேஷனில் உருவாகிறது. மற்ற கேரக்டர்கள் நிஜத்தில் நடிக்கிறார்கள். இதில் வில்லத்தனம் கலந்த பெண் வேடத்தில் அக்ஷரா கவுடா நடிக்கிறார். அஜீத்துடன் ஆரம்பம், ஜெயம் ரவியுடன் போகன் உள்பட பல படங்களில் அக்ஷரா நடித்துள்ளார்.