தேசிய விருது கிடைத்தும் பார்வதி சோகம்!! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 43 Second

பூ, சென்னையில் ஒரு நாள். மரியான் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவர் மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதுபோல் நடிகர் பகத் பாசிலும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வானார். தேசிய விருது கிடைத்ததுபற்றி இருவரும் பெருமிதத்துடன் பேட்டி அளித்திருந்தனர். ஜனாதிபதி கையால் விருது வழங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். சில தினங்களுக்குமுன் விழாவில் பங்கேற்று விருது பெற புறப்பட்டு டெல்லி சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு சிலருக்கு மட்டுமே ஜனாதிபதி தேசிய விருது வழங்குவார். பிறவிருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்று கூறப்பட்டதுதான் அதிர்ச்சிக்கு காரணம். ஜனாதிபதியிடமிருந்து விருதுபெறும் பட்டியலில் பஹத் பாசில், பார்வதி பெயர் இடம் பெறவில்லை. இதனால் இருவரும் அப்செட் ஆகினர். இதுபற்றி நடிகை பார்வதி மேனன் கூறும்போது, ‘ஜனாதிபதி கையால் தேசிய விருது பெறுவது என்பது மிகவும் கவுரவமான, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாகும்.

முதன்முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தோம். ஆனால் ஜனாதிபதி அனைவருக்கும் விருது கொடுக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது’ என்றார். அதேபோல் பஹத்பாசிலும் ஜனாதிபதியிடமிருந்து விருது பெறாதது வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். தேசிய விருதுகளை அனைத்து கலைஞர்களுக்கும் ஜனாதிபதி நேரில் வழங்குவது வழக்கம். இம்முறை 12 விருதுகள் மட்டுமே வழங்கினார். அவரிடம் விருது பெற்றவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் ஒருவர் ஆவார். தேசிய விருது பெறாமல் புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் அவை அனுப்பி வைக்கப்பட விருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)
Next post மாம்பழமாம் மாம்பழம்!!(மருத்துவம்)