கர்ப்பகால உடற்பயிற்சி அவசியம்!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 42 Second

கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக்கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர். சிலர், பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டி விடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சியின்மை மற்றும் உணவு கட்டுப்பாடுயின்மையே காரணம்.

கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)
Next post மகப்பேறு எனும் தடைக்கல்!!(மகளிர் பக்கம்)