கிங் கங்கையில் மூழ்கிய இளைஞரை காணவில்லை!!
கிங் கங்கையில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மீமுரே பிரதேசத்திற்கு பலகொல்ல, பகுதியில் இருந்து சுற்றுலா வந்த குழு ஒன்று கிங் கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலகொல்ல, தும்பர உயன பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.