By 12 May 2018 0 Comments

தயாரிப்பாளராகிறார் சதா! (சினிமா செய்தி)

விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இப்போது இயக்கிவரும் படம் ‘டார்ச்லைட்’. வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களைப்பற்றி பேசும் படம் இது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி டிரைவர்களுடன் தொழில் செய்யும் பெண்களைப் பற்றிய இந்தக் கதை, தொண்ணூறுகளில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் நாயகியாக சதா நடிக்கிறார். இயக்குநர் அப்துல் மஜீத்தின் திறமை மீது ஏற்பட்ட நம்பிக்கையால், அவர் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்க முன்வந்திருக்கிறார் சதா.



Post a Comment

Protected by WP Anti Spam