ஹாலிவுட்டில் என்ட்ரி ஆகும் ராதிகா ஆப்தே !! (சினிமா செய்தி)
ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி, டோனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆங்கில குறும்படம் ஒன்றிலும் இவர் நடித்திருக்கிறார். சேலை கட்டி குடும்ப பெண்ணாக நடித்துக்கொண்டிருந்தவர் திடீரென்று டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடித்தார். தவிர அடிக்கடி விவகாரமான கருத்துக்கள்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்த அவர், ‘தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்’ என்று சொல்லி அதிர்ச்சி தந்தார். கைவசம் அதிக படங்கள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்கள், மீடியாக்கள் வழியாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஹாலிவுட் படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்கும் ‘தி வெட்டிங் கெஸ்ட்’ ஹாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ராதிகா ஆப்தே. தேவ் படேல் ஹீரோ. பலமொழி படங்களில் நடித்து வருவதுபற்றி ராதிகா ஆப்தே கூறும்போது,’என்னை ஒரு மொழி நடிகையாக மட்டும் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. படங்களில் நடிக்க மொழி எனக்கொரு தடை கிடையாது’ என்றார்.