மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா!!(உலக செய்தி)
காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 35 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.