ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு!!(மருத்துவம்)

Read Time:2 Minute, 46 Second

‘அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுவது போல ராகி, சாமை, தினை, கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரிக்கும்போது அதன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கும். இதன்மூலம் விலையும் படிப்படியாகக் குறையும் என்று மாற்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால் ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்குவது பற்றி முடிவு செய்ய மத்திய வேளாண்மை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருந்தது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறு தானியங்களைப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகம் செய்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் சாத்தியங்களை அலசிய பிறகு அக்குழு இப்போது ‘வழங்கலாம்’ என பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிவிப்பு மத்திய அரசிதழில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இதே போன்றதொரு திட்டத்தை 2013-ம் ஆண்டில் தமிழக அரசு தொடங்கியது. ஆனால், அதை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டது. ஆனால், தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுதானியங்கள் சாப்பிடுவது என்பது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்கும். இதனால் இந்த ஆரோக்கியமான சமூகம் என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் சிறுதானிய வகைகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதால், மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு கிராமப்புற விவசாயிகள் வாழ்வும் வளம்பெறும் என்
பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையான டிராகன்(Dragon) இருப்பதற்கான ஆதாரங்கள்! (வீடியோ)
Next post ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது!!