பெங்காலி பெண்ணாக சாய்பல்லவி !!(சினிமா செய்தி)
ஃபிதா தெலுங்கு படத்தால் டோலிவுட்டிலும் பிரபலமான சாய் பல்லவி, அடுத்து படி படி லேச்சே மனசு படத்தில் சர்வானந்துடன் நடிக்கிறார். இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெங்காலி பெண்ணாக அவர் நடிக்கிறார். அதற்கேற்ப தனது தோற்றத்தை மாற்றியுள்ள அவர், அந்த போட்டோக்களை வௌியிட்டுள்ளார். மருத்துவ மாணவியாக அவர் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. ரொமான்டிக் கதை படமான இதை ஹனு ராகவபுடி இயக்குகிறார். தமிழில் தனுஷுடன் மாரி 2 படத்தில் நடிக்கும் சாய் பல்லவி, செல்வராகவனின் என்கேஎஸ், மிஷ்கின் இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்கிறார்.