20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!(மருத்துவம்)

Read Time:4 Minute, 39 Second

டயாபட்டீஸ் மேக் இட் சிம்பிள்

இருபது வயது இளைஞர்களே… எல்லாம் இன்பமயமாக வாழ்த்துகள். எனினும், இளமைத்துடிப்போடு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது கட்டுரையின் கடைசி பாராவில் காத்திருக்கிறது.

அதற்கு முன் இந்த வாக்கியத்தை வாசிப்பதற்கே எரிச்சலாக இருந்தாலும், உண்மை இதுதான். உங்களைச் சுற்றியுள்ள 10 நபர்களைப் பட்டியலிடுங்கள். அவர்களில் ஒருவருக்கு நிச்சயமாக நீரிழிவு இருக்கும். அதிலும் இளம் வயதிலேயே டைப் 2 நீரிழிவு ஏற்பட்டவராக இருந்தால்,பிரச்னைகள் மிக அதிகம்.

20+ வயதுகளில் நீரிழிவு தாக்கிய இளைஞர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையை அளித்துள்ளது ஆஸ்திரேலியாவிலுள்ள பேக்கர் ஹார்ட் அண்ட் டயாபட்டீஸ் இன்ஸ்டிட்டியூட். பரிணாம வளர்ச்சியில் நீரிழிவும் புதிய பரிணாமம் எடுத்துள்ளது. முன்பைவிட அதிக வேகத்துடன் பலத்த தாக்குதலை அது அளிக்கிறது. கவனக்குறைவாக இருந்தாலோ, கண்டுகொள்ளாமல் விட்டாலோ பருமன் ஏற்படுகிறது. வளர்சிதைமாற்றப் பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற முக்கிய பகுதிகளிலுள்ள செல்கள் செயல்திறன் குறைகிறது. குறிப்பாக, கொழுப்பு எங்கெல்லாம் இருக்கக்கூடாதோ அங்கெல்லாம் படர்ந்து ஆபத்துக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே இதயப் பிரச்னைகளுக்கு வாசல் திறந்துவிடப்படுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திலும் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.

நீரிழிவு பராமரிக்கப்படாத காரணத்தால் இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்புக்குள்ளாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் என்ன புதிய ஆராய்ச்சி? புதிய முடிவு? புதிய எச்சரிக்கை?

இருக்கிறது. இளம் வயது நீரிழிவு காரணமாக ஏற்படும் பருமன் இன்னுமொரு புதிய பிரச்னைக்கு வித்திடுகிறது. அது கேன்சர். வயதானவர்களை விடவும் இளம் வயதினரிடம்தான் கேன்சர் அதிக அளவிலும் அதிக வேகத்திலும் பரவுகிறது. இந்தப் பரவலில் அனைத்துவிதமான கேன்சர்களும் அடக்கம்.

முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்… மாஸ்டர் ஹெல்த் அப் போன்ற முழு உடல்
பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்வதுண்டு. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை 20 வயது என மாற்றம் செய்யப்படுகிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை. பயமுறுத்துவது போலவே இருந்தாலும் வேறுவழியில்லை.
சரி… இதற்கு என்னதான் தீர்வு?

நீரிழிவு வராமல் தடுப்பது முதல் வழி. தவறி வந்தாலும் மிகமிகக் கவனத்துடன் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவை மட்டுமே ஹார்ட்
அட்டாக், ஸ்ட்ரோக், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, கேன்சர் உள்ளிட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்க உதவும். ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் இருந்தால் எந்தப் பிரச்னையையும் எந்த வயதிலும் சமாளிக்க முடியும்!

இளம் வயதிலேயே டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

* இதயம் மற்றும் ஸ்ட்ரோக் பிரச்னைகள் தாக்குவதற்கான அபாய அளவு 60%.
* கேன்சர் உள்ளிட்ட பிரச்னைகளால் உயிரிழக்கும் அபாய அளவு 30%.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி!!(வீடியோ)
Next post போக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா? (வீடியோ)