சொரியாசிஸின் அடுத்த நிலை!!(மருத்துவம்)

Read Time:8 Minute, 20 Second

அழகே… என் ஆரோக்கியமே…

சொரியாசிஸ் நோய் பற்றி கடந்த சில இதழ்களுக்கு முன்பு விரிவாகப் பேசியிருந்தோம். இதற்கு அடுத்த நிலையாகவும், முக்கியமான சருமப் பிரச்னையாக இருக்கும் லைக்கன் ப்ளேனஸ் (Lichen planus) பற்றியும் தெரிந்துகொள்வோம்.

லைக்கன் ப்ளேனஸை ஆங்கிலத்தில் Five P என்று அழைப்பர். Pruritic, Purplish, Polygonal, Plane topped, Papules என்று ஐந்து காரணங்களின் காரணமாக இதற்கு இந்த பெயர். இதில் Pruritic என்ற வார்த்தை அரிப்பு என்பதையும், Purplish என்பது ஊதா நிறத்தையும், Polygonal என்பது பல கோணங்கள் உடையதையும், Papules என்பது திட்டு போன்றது/தட்டை வடிவமானது என்றும் பொருள்படும்.

லைக்கன் ப்ளேனஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஊதா நிறத்தில் சின்னச் சின்ன பருக்கள் போன்ற கட்டிகளோ அல்லது பெரிய திட்டுகளோ தோன்றலாம். மிக அதிகமான அரிப்பும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும். லைக்கன் ப்ளேனஸ் கட்டி தட்டை வடிவத்தில் காட்சி அளிக்கும். இந்த பாதிப்பின் அடிப்படையிலேயே இதன் பெயரும் அமைந்தது.

லைக்கன் ப்ளேனஸ் நோய் ஒருவருக்கு ஏன் வருகிறது என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வது மிகவும் கடினம். ஏனெனில், ஒரே ஒரு காரணத்தை மட்டுமே உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இப்படியெல்லாம் ஏற்படுமோ என்ற மருத்துவ கோட்பாடுகள் பல உள்ளன.
சுய எதிர்ப்பு நோய் குறைபாடு (Auto Immune disorders) காரணமாக சிலருக்கு லைக்கன் ப்ளேனஸும் சேர்ந்து வருவதை கண்டறிந்துள்ளார்கள். உதாரணம்: புழு வெட்டு, சர்க்கரை வியாதி, மயஸ்தீனியா க்ரேவிஸ் போன்ற நோய்கள்.

அதேபோல் சில தொற்று நோய்கள் இந்த நோயை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளார்கள். உதாரணம்,: Hepatitis C, Hepatitis B. சிலருக்கு MMR, DPT தடுப்பூசிகள் போட்ட பின் வந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் மாத்திரைகளான, Propranolol, Enalapril, Amlodipine, Methyl dopa மற்றும் வலிப்பை கட்டுப் படுத்தும் Carbamazepine, காசநோய்க்காக கொடுக்கப்படும் Isoniazid, Pyrazinamide, Ethambutol ஆகியவற்றுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் Ranitidine, Proton Pump inhibitors போன்ற சிலவகை மருந்துகள் உட்கொள்வதால்கூட இது வரலாம் இங்கு சொல்லியிருப்பது கொஞ்சம்தான்.

இன்னும் நிறைய மருந்துகள் இதுபோன்ற சரும நோயை உருவாக்கலாமோ என்ற பெரிய பட்டியலே உள்ளது.முன்பெல்லாம் சொத்தைப்பற்களை அடைப்பதற்கு `Mercury Fillings’ பயன்படுத்துவார்கள். அதனாலும் வரலாம். மற்ற கன உலோகங்களான தங்கம், Arsonic, Antimonials போன்ற பொருட்களாலும் லைக்கன் ப்ளேனஸ் வரலாம்.மேலே சொன்ன தொற்றுக்கள், கன உலோகங்கள், மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவை சருமத்தில் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன?

இவற்றில் இருக்கும் ஏதோ ஒரு காரணி தோலை மாற்றி தோலில் உள்ள ‘ஒரு பொருளை’ திடீரென்று நம்முடைய எதிர்ப்பு சக்தியிடம் சென்று இது நம்மைச் சேர்ந்தது அல்ல என்று சொல்லிவிடுகிறது. உடனே நம்முடைய எதிர்ப்பு சக்தியானது நம் ‘தோலை’ எதிர்த்து வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அந்த ‘ஒரு பொருள்’ என்னவென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

என்றாலும், நம் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த பல நல்ல மருந்துகள் உள்ளன.லைக்கன் ப்ளேனஸில் பல வகை உள்ளன. இங்கே முதலில் விவரித்த வகைதான் அதிகமாக உள்ளது. பொதுவாக ஓரிரு வருடங்களில் நன்றாக குறைய வாய்ப்புள்ளது.லைக்கன் ப்ளேனஸில் வேறு பல வகைகளும் உண்டு.

Hypertrophic type : இது பொதுவாக காலில்தான் வரும். இதில் உண்டாகும் திட்டுகள் நன்கு அழுத்தமாக, கருப்பாக, மிகவும் அரிப்பு உடையதாக
இருக்கும்.

Mucosal type : இதில் நாக்கு, வாயின் உள்பகுதி, பிறப்புறுப்பு போன்ற இடங்கள் பாதிக்கப்படும்.

Linear type : கையிலோ அல்லது காலிலோ ஒரு கோடாக ஏற்படும்.

Actinic type : இதில் வெயில் படும் இடங்கள் மட்டும் பாதிக்கப்படும்.

Ulcerative type: இது பொதுவாக வாய், பிறப்புறுப்பு போன்ற இடங்களில் உண்டாகும்.

Nail: நகங்களை மட்டும் சில நேரங்களில் பாதிக்கலாம்.

இன்னும் பல வகைகள் இருந்தாலும், முக்கியமான 2 வகைகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.Lichen Planus Pigmentosus: இந்த வகையில் பொதுவாக வெயில் படும் இடங்களான முகம் மற்றும் கழுத்தில் கருத்த திட்டுகள் ஏற்பட்டு விடும்.

கொஞ்சம், கொஞ்சமாக நெஞ்சுபகுதி, வயிறு போன்ற இடங்களுக்கும் பரவலாம். இதுபோன்று திடீரென்று முகமோ அல்லது கழுத்தோ கருத்து போனால் உடனடியாக சரும நல மருத்துவரின் உதவியை நாடுங்கள். ஆரம்பத்திலேயே வைத்தியம் செய்தால் நோயை கட்டுப்படுத்த முடியும். சிலருக்கு முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியும்.

Lichen Planopilaris : இதில் தலைமுடி பாதிக்கப்படும். ஆங்காங்கே தலையில் முடி கொட்டிவிடும். இதையும் ஆரம்ப நிலையிலே பார்த்தால் கொஞ்சம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. மக்கள் இதை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால்கூட சாதாரண ‘புழு வெட்டு’ (புழுவுக்கும் இந்த நோய்க்கும் சம்பந்தமில்லை) என்று நினைத்துக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர். இதற்கு ஏன் வைத்தியம் ஆரம்பத்திலேயே அவசியம் என்றால் முடியின் வேர் கால்கள் நிரந்தரமாக அழிந்துவிடலாம். அப்பொழுது தலையில் தழும்புகள் உண்டாகிவிடலாம். தழும்புகளில் முடி திரும்பவும் முளைக்காது.

இதற்கான சிகிச்சைகள்…

ஸ்டீராய்டு களிம்பு மற்றும் மாத்திரைகள், அரிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள், Hydroxychloroquine, Acitretin, Azathioprine, Methotrexate போன்ற மாத்திரைகளை பரிந்துரைக்கப்படும். நம் உடலின் பெரிய உறுப்பு தோல்.

ஆனால் அது நம் கைகளுக்கு எளிதாக அகப்படுவதால் பல நேரங்களில் அடுத்து வீட்டு பாட்டியின் வைத்தியத்துக்கு உட்படுத்தப்படுகிறது. சருமத்தில் பல நோய்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆகையால் கை வைத்தியமோ, பாட்டி வைத்தியமோ செய்யாமல் முறையான வைத்தியம் செய்யுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்!!( கட்டுரை )
Next post வெயில் எனக்கு பிடிக்கும்!!(மகளிர் பக்கம்)