மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி!!
மகரகம நகர சபைக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹைலெவல் வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.