போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை !!

Read Time:2 Minute, 23 Second

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மரியா எக்ஸ்போஸ்டோ (54). மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்போர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். அந்த பையில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது எனவும், அதை தனது ஆன்லைன் நண்பர் ஒருவர் தன்னிடம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுக்குமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து அந்த பையை எடுத்து வந்ததாகவும், மரியா கூறினார்.

அந்த பையை தன்னிடம் கொடுத்த நபர் அமெரிக்க இராணுவ வீரர் எனவும், தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருவதாக கூறியதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரியாவுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக மரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மூன்று அவுஸ்திரேலியர்களுக்கு, மலேசியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடு உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு!!
Next post அரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு !!