பேருந்தின் மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!!
கொழும்பு – பதுள்ளை பிரதான வீதியின் கல்கந்த, தியதலாவ பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.