பலாப்பழ உணவுகள் !!(மருத்துவம்)

Read Time:2 Minute, 46 Second

*இனிப்பான பலாச்சுளையின் விதையை நீக்கி விட்டு தசைப்பகுதியை சிறிதாக நறுக்கி அதில் ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் போன்றவை சேர்த்து புட்டு தயாரிக்கலாம்.

*பலாப்பழ விதையையும், கோவைக்காயையும் நீளவாக்கில் நறுக்கி உப்பும், மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவைக்க வேண்டும். மிளகாய்த்தூள், பூண்டு கலந்து தேங்காயும் இடித்து சேர்த்தால் சுவையான கூட்டு ரெடி.

*முற்றிய பலாச்சுளையை வேகவைத்து அரைத்து அதில் சிறிய வெங்காயம், மிளகுத்தூள் கலந்து பப்படம் போல் தயாரித்து சுவைக்கலாம்.

*பலாப்பழ சுளையில் விதையை நீக்கி விட்டு நறுக்கி மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் அரையுங்கள். அதில் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், நெய் கலந்து பலாப்பழ ஜாம் தயாரித்து விடலாம்.

*பழுத்த பலாப்பழத்தை ஆவியில் வேக வையுங்கள். பின்பு அதனை பால் சேர்த்து அரையுங்கள். முட்டையின் வெள்ளை கருவையும் நன்றாக அடித்துக் கலக்கி அதில் சேருங்கள். எல்லாவற்றையும் சேர்த்து ஆவியில் வேகவைத்து ஆறிய பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் பலாப்பழ புட்டிங் ஆகி விடும்.

*நன்றாகப் பழுத்த பலாப்பழ சுளையை நறுக்கி வெல்லப்பாகு, நெய், தேங்காய்ப்பால் சேர்த்து பலாப்பழ அல்வா தயாரிக்கலாம். இதில் பச்சரிசியை ஊறவைத்து அரைத்து சேர்க்கலாம். வித்தியாசமான ருசி கிடைக்கும்.

*பலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சிறிய வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு தயாரிக்கலாம். இதில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் சேர்க்க வேண்டும். இதனை தாளிக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

*பலாப்பழத்தை அரைத்து அரிசி மாவு, தேங்காய், சீரகத்தூள், வெல்லம் கலந்து பலாப்பழ பலகாரம் தயாரிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் குழந்தைகளிடம் உரையாடுங்கள் !!(மகளிர் பக்கம்)
Next post 3 ல் ஒரு பெண்ணுக்கு… !!(அவ்வப்போது கிளாமர்)