உடல் சக்தியைப் பறிக்கும் தாலசீமியா நோய்!!(மருத்துவம்)

Read Time:3 Minute, 19 Second

சர்வதேச தாலசீமியா தினம் – மே 8

தாலசீமியா என்கிற ஆபத்தான நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது, இந்த நோய் பரவுவதைத் தவிர்க்க அதன் தடுப்பு முறைகளில் கவனம் செலுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மே 8-ம் தேதி சர்வதேச தாலசீமியா தினம்(World Thalassaemia Day) அனுசரிக்கப்படுகிறது.

தாலசீமியா என்பது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகிற மரபியல் சார்ந்த ஒரு நோய். பெற்றோர் இருவரிடம் இருந்தும் குறைபாடுள்ள ஒரு மரபணுவை பெறுகிறபோது பிள்ளைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் அழிவதால் தாலசீமியா உண்டாகிறது. இந்த நோயால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால், ஆக்சிஜன் வழங்குதல் பாதிக்கப்பட்டு ரத்தசோகை ஏற்படுகிறது.

* நோய் அறிகுறிகள்

ஆரம்ப கட்டத்தில் ரத்த சோகை ஏற்படுகிறது. தாமதமான வளர்ச்சி, களைப்பு, பலவீனம், மூச்சடைப்பு, தோல் மஞ்சள் நிறமாதல் போன்றவை இந்த நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள். இதனால் எலும்புக் குறைபாடுகள், இதயப் பிரச்னை, பலவகைத் தொற்றுக்கள், மண்ணீரல் வீக்கம் போன்ற பிரச்னை
களும் ஏற்படலாம்.

* சிகிச்சை முறைகள்

மருந்துகள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, நோயை எடுத்துச் செல்பவரைக் கண்டறிதல் போன்ற மருத்துவ முறைகள் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். தாலசீமியா நோயாளி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். தாலசீமியா ஒரு மரபியல் பிரச்னையாக இருப்பதால் அதைத் தடுப்பது கடினம். திருமணத்துக்கு முன் மரபியல் ஆலோசனை பெறுவதன் மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும். திருமணத்துக்கு வரன்முறையான ஜாதகத்தைவிட மரபியல் சோதனையே சிறந்தது.

தாலசீமியா நோயாளிகளுக்கு சில ஆலோசனைகள்:

*உலகளாவிய நோய்த்தடுப்பு முறைகளைப் பின்பற்றி தொற்றுக்களைத் தவிர்க்க வேண்டும்.

*நோயாளி அடிக்கடி ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்வதால் இரும்புச்சத்து குறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

*ஆரோக்கியமான உணவுமுறையும் தொடர் உடற்பயிற்சியும் எதிர்த்துப் போராட உதவும்.

* குடும்பம் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் நோயாளிகளுக்கு மிகவும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பிக்கு சிசிடிவி இருப்பது தெரியாது போல !! (வீடியோ)
Next post ஐஸ் ஆப்பிள் சாப்பிடலாமா?!(மருத்துவம்)