நகம் சொல்லும் சேதி!(மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 8 Second

நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, நமது உடலில் என்ன நோய் இருக்கிறது என்று ஓரளவு கண்டுபிடித்து விடலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா? என்பதையும் நகத்தைப் பார்த்தே சொல்லி விட முடியும். நம் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதையும் கைவிரல் நகங்களைப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

* நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயு தொல்லை அதிகமாக இருப்பதற்கான அறிகுறி.
* வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதற்கான அடையாளமாகும்.
* உடலில் போதிய ரத்தம் இல்லையென்றால் நமது கை விரல் நகங்கள் வெளுத்துப்போய் காணப்படும்.
* மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் ரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருப்பதற்கான அறிகுறியாகும்.
* நகங்கள் சற்று உப்பி காணப்பட்டால் மூச்சு சம்பந்தமான நோய்கள் மற்றும் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* விரல் நகங்கள் சற்று நீல நிறமாக தென்பட்டால் இதயம் பலவீனமாக இருப்பதற்கு அடையாளமாகும்.
* நகங்கள் மிகவும் சிவப்பாக இருந்தால் உடலில் ரத்தத்தின் அளவு சற்றே அதிகமாக இருப்பதை காட்டுகிறது. இவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
* நகங்களில் சொத்தைகள் காணப்பட்டால் உடலில் போதிய ஊட்டச்சத்து இல்லை என்று அர்த்தம்.
* லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தை இது குறிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடல்நலம் காக்கும் உணவுகள்!!(மருத்துவம்)
Next post இப்படியா ஆபாசமாக ஆடை அணிவது? ( சினிமா செய்தி )