தென்கொரியாவில் போர் பயிற்சிகள் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் !!( உலக செய்தி)

Read Time:1 Minute, 48 Second

தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது குறித்து வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன்னுடன் தான் விவாதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் வடகொரியா அதிபரை சந்தித்து பேசிய அவர் அமெரிக்கா திரும்பிவிட்டார். அங்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் தென்கொரியாவில் போர் பயிற்சிகளை நிறுத்தபோவதாக குறிப்பிட்டார். மேலும் பயிற்சிக்காக விமானங்கள் பறப்பதும், மலைப்பகுதிகளில் குண்டு போடுவதும் போன்ற நடவடிக்கைகள் மூலம் வீண் செலவு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தென்கொரியாவில் போர் பயிற்சிகள் நிறுத்தப்படும் என்றும் வடகொரியாவில் உள்ள ஏவு தளங்களை அழிப்பது குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் கிங் ஜாங் உன் அடுத்த சில நாட்களில் வெளியிடுவார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன்னுக்கு அழைப்பு விடுத்துள்ள டிரம்ப் பயணத்திற்கு முன்னதாக நல்லெண்ண நடவடிக்கைகளை அவர் நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெயிலுக்கு தர்பூசணி சாப்பிடுங்க..!!!(மருத்துவம்)
Next post வீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்!!(மகளிர் பக்கம்)