By 16 June 2018 0 Comments

20 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

வெல்லவாய, குடா ஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏதிலிவெவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 20 கிலோ கிராம் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெஹேரயாய, ஏதிலிவெவ பகுதியில் நீண்ட காலமாக மிகவும் சூட்சமமான முறையில் சந்தேக நபர் மரை இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் வெஹேரயாய பிரதேசத்தை சேர்ந்த 43 வயது நிரம்பியவர் எனவும் இன்று (16) அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

Protected by WP Anti Spam