நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி!!
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்போ நகரில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இரண்டு முறை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மொத்தம் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போகோஹரம் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
ஆப்கனில் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 2வது நாளாக ேநற்றும் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. தற்காலிக போர் நிறுத்த காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, ஜலாலாபாத்தில் நன்கர்ஹர் மாகாண கவர்னர், தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கவர்னர் மாளிகையின் அருகே தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 18 பேர் பலியாயினர். முன்னதாக நேற்று முன்தினம் இதே மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.