By 28 June 2018 0 Comments

முதல் காதலனை சந்தித்த அமலாபால் !!(சினிமா செய்தி)

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் 90 சதவீதம்பேர் முதல்காதல் அனுபவத்தை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். இதுபற்றி பல்வேறு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இது அமலாபாலின் 2வது காதல் என்பது தெரியவந்திருக்கிறது.

அதற்கு முன்பே தனக்கு ஏற்பட்ட முதல் காதல் பற்றிய அனுபவத்தை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் அமலாபால். அவரது முதல் காதலன் வேறு யாருமல்ல நடிகர் மாதவன்தானாம். இதுபற்றி அமலாபால் கூறும்போது,’எனக்கு பிடித்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறேன். பலருக்கும் வாழ்வில் முதல் காதல் இருந்திருக்கும்.

எனக்கும் முதல் காதல் இருந்தது. நான் காதலித்தது வேறுயாரையுமல்ல.. நடிகர் மாதவனைத்தான். சிறுவயதிலிருந்தே அவர் மீது எனக்கு காதல் உண்டு’ என்றார். மாதவனை அருகில் வைத்துக்கொண்டே இதுபோல் அமலாபால் சொன்னார். அதைக்கேட்டு மாதவன் சிரித்தார். பிறகு அவரை கட்டிபிடித்து வாழ்த்தினார் அமலாபால். அமலாபால்தான் மாதவனை காதலித்ததாக கூறினாரே தவிர மாதவன் இதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் லேசாக புன்னகை செய்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam