12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சிறுவர்கள் கைது!!

Read Time:1 Minute, 51 Second

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரைபொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 12 ம் திகதி ஆடுகளை மேய்கச் சென்ற 12 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்ற அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவர்கள் சனநடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பயம் காரணமாக தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) தெரிவித்ததையடுத்து உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள் !!(வீடியோ)
Next post கதாநாயகியான திருநங்கை… !!(சினிமா செய்தி)