கர்ப்பப்பை பத்திரம்!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 20 Second

நம்மில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். அது கர்ப்பப்பை நார்திசுக் கட்டியின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு தற்போது நவீன முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது குறித்து நம்மிடம் விளக்குகிறார் இன்டர்வென்ஷனல் கதிரியக்க

சிகிச்சை பிரிவு இயக்குநர், டாக்டர் விகாஷ்.சி.எஸ்.

“ஃபைப்ராய்டு எனப்படுகிற கர்ப்பப்பையில் வரும் நார்த்திசுக் கட்டியானது, சமீப காலம் வரை நடுத்தர மற்றும் வயதில் மூத்த பெண்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்தது. இப்போது அந்தப் பிரச்னை இளம் பெண்களுக்கும் ஏற்படுகிறது. கர்ப்பப்பையில் வருகிற ஒருவித தசைக் கட்டியே ஃபைப்ராய்டு. இதில் 3 வகைகள் உள்ளன.

ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் அதிகமாவதே இதற்கு முக்கிய காரணம். பரம்பரையாகவும் இந்தப் பிரச்னை தாக்கலாம். ஃபைப்ராய்டு எனப்படும் கர்ப்பப்பை நார்த் திசுக்கட்டி அறிகுறிகள் இன்றியும் வரலாம் அல்லது கீழ்க்கண்ட அறிகுறிகளோடும் தென்படலாம்.

* மாதவிலக்கு நாட்களில் அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு.
* மாதவிலக்கு நீண்ட நாட்கள் நீடிப்பது.
* மாதவிலக்கே வராமல் இருப்பது.
* மாதவிலக்கு நாட்களில் அதிக வலி.
* உடலுறவின் போது அதிக வலி.
* அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியநிலை ஏற்படுவது.
* மலச்சிக்கல் ஏற்படுவது.
* முதுகு, கால்களில் வீக்கம், வலி.
* கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படுவது.
* தொப்பை ஏற்படுவது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவு கண்டு பிடிக்கப்படும். 4 அல்லது 5 செ.மீ. அளவுள்ள கட்டிகள் என்றால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமே சரி செய்து விடலாம். அதன் மூலம் கர்ப்பப்பையையும் பாதுகாக்கலாம். அதுவே கட்டி வளர்ந்து பெரிதாகி விட்டால் சிகிச்சையளிப்பது சிரமம்.

கர்ப்பப்பையும் பாதிக்கப்படும். இது போன்ற சூழ்நிலையில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹிஸ்டெரெக்டமி (கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை) அல்லது மயோமெக்டமி (ஃபைப்ராய்டு எனப்படும் நார்த் திசுக்கட்டிகளை அகற்றும் சிகிச்சை) போன்றவற்றுக்கு பரிந்துரைக்கப்படும். இந்த சிகிச்சைகள் அதிக வலியுடையவை. மேலும் குணமாக அதிக நாட்கள் ஆகும். நீண்டநாள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலி
சேஷன் (அல்லது) யுட்ரைன் ஆர்டெரி எம்பாலிசேஷன் என்பது புதிய வகை சிகிச்சையாகும். இதன் மூலம் அறுவை சிகிச்சையின்றி ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை கர்ப்பப்பை நார்த் திசுக்கட்டியை அகற்றுவதுடன் கருப்பையையும் பாதுகாக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய அவசியம் இல்லை என்பது இந்த சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். ஒரு நாள் அடிப்படையிலேயே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சிகிச்சையின் மூலம் அன்றைய தினமே வீடு திரும்பலாம் அல்லது அடுத்த நாள் வீடு திரும்ப முடியும். கர்ப்பப்பை நார்த் திசுக்கட்டிகளை கரைக்க தற்போது யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் என்ற நவீனமுறை பயன்படுத்தப்படுகிறது. இது இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி நிபுணர்களால் செய்யப்படும் சிகிச்சை. இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல், இடுப்புக்கு கீழே உள்ள ரத்தக்குழாயில் சிறிய ஊசி மூலம் சிறிய பிளாஸ்டிக் குழாயை செலுத்தி, அதில், ‘பாலிவினைல் பார்ட்டிகில்ஸ்’ எனப்படும் பொருளை பயன்படுத்தி, கர்ப்பப்பையிலுள்ள கட்டிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது.

ரத்த ஓட்டத்தை தடுப்பதால், கட்டிகள் சுருங்கி விடுகின்றன. சில மாதங்களில் மிக நல்ல முன்னேற்றத்தை உணரலாம். இந்த சிகிச்சையால், கருப்பைக்கு பாதிப்பேதும் இல்லை. ஒரு நாள் மருத்துவமனைக்கு வந்து, அன்றே சிகிச்சை முடிந்து திரும்பி விடலாம். இதனால், அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் தழும்புகள் கூட ஏற்படாது. யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் சாதாரண மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுகிறது. இதற்கு 60 நிமிடங்கள் ஆகும்.

சிறிய ஊசி மூலம் துளையிடப்படுவதால் பிளவுகளோ வடுக்களோ தழும்புகளோ ஏற்படுவதில்லை. இரண்டாம் நாள் முதல் 5 நாட்களுக்குள் வழக்கமான பணிகளில் ஈடுபட முடியும். வழக்கமான ஹிஸ்ட்ரெக்டமி சிகிச்சை முறையில் சுமார் 7 நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் வழக்கமான பணிகளுக்கு திரும்ப சுமார் 2 மாதங்கள் ஆகும்.

மயோமெக்டமி சிகிச்சை முறையிலும் 4 முதல் 7 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப 3 முதல் 4 வாரங்கள் ஆகும். அந்த வகையில் யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் முறை பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான்.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அப்போது குடல் மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட அருகில் உள்ள உறுப்புகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஹிஸ்ட்ரெக்டமி சிகிச்சையை சிறு வயதில் செய்து கொண்டால் இடுப்பு எலும்பு தசைத் தொகுதி பலவீனமாவதற்கும் வாய்ப்பு உண்டு. இது பின்னாளில் சிறுநீர் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமையும். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் முறையால் தவிர்க்கப்படும்.

லோக்கல் அனெஸ்தீசியா வகை மயக்க மருந்தின் மூலம் இந்த சிகிச்சை செய்யப்படுவதால் எந்த ஆபத்தோ பின் விளைவுகளோ ஏற்படுவதில்லை. இதய நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் போன்ற மற்ற வகையான நோய்கள் உள்ளவர்களுக்கு ஜெனரல் அனெஸ்தீசியா மயக்க மருந்துகள் கொடுத்து சிகிச்சை செய்ய முடியாது. அத்தகையவர்களுக்கு லோக்கல் அனெஸ்தீசியா மூலம் யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் முறையில் எளிதில் சிகிச்சை செய்யப்படுகிறது.

யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் சிகிச்சை முறையின் மற்ற முக்கியமான நன்மைகளில் ஒன்று ரத்தம் வீணாவதில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் ரத்தம் வீணாகி அதன் மூலம் பல சிக்கல்கள் ஏற்படும். அது யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் முறையில் தவிர்க்கப்படுகிறது. மற்ற சிகிச்சைகளை விட யுட்ரைன் ஃபைப்ராய்டு எம்பாலிசேஷன் சிகிச்சை முறை பல்வேறு நன்மைகளைக் கொண்டது எனவும் பாதுகாப்பானது என்றும் தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் ஹிஸ்டெரெக்டமி சிகிச்சையில் 75 சதவீதம் அறுவை சிகிச்சைகள் தேவையற்றது எனவும் அது தவிர்க்கப்படக்கூடியது என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. யுட்ரைன் பைப்ராய்டு எம்பாலிசேஷன் சிகிச்சை முறை மிக குறைந்த வகையிலான துளையிடும் சிகிச்சை முறையாகும். இதன் மூலம் கர்ப்பப்பையை அகற்றாமல் காக்க முடியும். விரைந்து குணமடையலாம். நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?(அவ்வப்போது கிளாமர்)
Next post பெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு!!(உலக செய்தி )