இலங்கையில் 11 முஸ்லிம்கள் படுகொலை: -விடுதலைப்புலிகள் மீது ராணுவம் புகார்

Read Time:3 Minute, 8 Second

Slk.Flag.1.jpgஇலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு சில நாட்களாக ஓய்ந்து இருந்த சண்டை இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கிழக்கு பகுதியில் கல்முனைக்கு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏற்றிச்சென்ற ஒரு கப்பலை ராணுவத்தினர் வழிமறித்தனர். இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் 4மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சண்டை நடந்தது. ராணுவ விமானம் சரமாரி குண்டு வீசியது. இலங்கை ரோந்து கப்பலும் பீரங்கிகளால் தாக்கியது. இதில் விடுதலைப்புலிகளின் ஆயுத கப்பல் மூழ்கடிக் கப்பட்டது.

அதேநேரத்தில் திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்பட பல பகுதிகளில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் ராணுவம் நேற்று மூடிவிட்டது. அல்லைப்பிட்டி பகுதிக்கு செல்லும் பாதையும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தமிழர்கள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பனாமா அருகே பொட்டுவில் கிராமத்தில் முஸ்லிம்கள் 11 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள். விடுதலைப்புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை அரசும் ராணுவமும் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ரோடு வேலை செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்தது.

இலங்கையில் இவ்வாறு உள்ள நிலைமை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்மரசிங்கே கூறியதாவது:- இந்திய அமைதிப்படை இருந் திருந்தால் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு இருக்கும். இந்தியா-இலங்கை ஒப்பந்தகளுக்கு பின்னர் பல்வேறு ஆயுத குழுக்கள் ஜனநாயக பாதைக்கு திரும்பின. விடுதலை ஜனநாயக பாதைக்கு கொண்டு வந்திருப்பார்கள். ஜே.வி.பி.யின் நிர்பந்தம் காரண மாக இந்திய அமைதிப் படையை திருப்பி அனுப்பினோம். இப்போது அதன் விளைவை அனுபவித்து வருகிறோம். இவ்வாறு ரனில்விக்ரம சிங்கே கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விண்வெளி ஆய்வு நிலைய பணிமுடித்து பூமிக்கு புறப்பட்டது அட்லாண்டிஸ்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்