கை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமையை போக்க வேண்டுமா???..!!

Read Time:6 Minute, 3 Second

நம்மில் அனைவருக்கும் முழங்கால் மற்றும் முழங்கையில் கருமை மண்டி, கை மற்றும் கால் முட்டிகளில் பொறிப்பொறியாக பரு போன்ற தழும்புகள் காணப்படும்.

பெரும்பாலும் வெள்ளைத்தோல் தேகம் கொண்டவரில் இந்த விடயம் பிரௌன் நிறத்தில் அமைந்திருக்கும்.

கையில் கருமை இருந்தால் என்ன? யாருக்குஎன்ன நஷ்டம் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம்.

ஆனால், உங்களை இந்த உலகம், சுற்றியுள்ள மனிதர்கள் எப்பொழுதும், எந்நேரமும் கவனித்துக் கொண்டேஇருக்கிறார்கள்.

நீங்கள் அணியும் ஆடை, உங்கள் உடல் தோற்றம் இந்த விஷயங்களை முன்னிறுத்தி தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையே நிர்ணயிக்கின்றனர்.

நம்முடைய உடல் தோற்றம் அழகானதாக இருந்தால், அந்த உணர்வே நமக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்.

ஏன் ஏற்படுகிறது?

மனித உடல் தன்னை தானே காக்கும் சக்தியை இயற்கையிலேயே பெற்று உருவாகுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

உடல் திசுக்களை காக்க வேண்டிய பட்சத்தில் ஏதேனும்வளர்ச்சி அல்லது மாற்றங்கள் ஏற்படலாம்.

கை மற்றும் கால் முட்டிகளை உராய்வில் இருந்து காப்பதற்காக அதனை சூழ்ந்துஉள்ள தோல் கருமையையும், சொரசொரத்தன்மையையும் அடையலாம்.

சூரிய ஒளியின் கதிர்கள் உடலில் கருமையை ஏற்படுத்தலாம். உடலில் நீக்கப்படாமல் சேர்ந்த அழுக்குகள் இந்த நிலையை ஏற்படுத்தலாம்.

மரபு ரீதியான காரணங்கள் அல்லது உட்கொள்ளும் மாத்திரை மருந்துகள். உடலின் தன்மையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

கருமையை நீக்குவதற்கான முறைகள்

தேன்

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும்.

தேவையானவை

தேன் – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – பாதி எலுமிச்சை

சர்க்கரை – 2 தேக்கரண்டி

செய்முறை

இந்த மூன்றையும் ஒன்றாய் சேர்த்து, நன்றாக கலந்து வாரத்திற்கு இருமுறை முட்டிகளில் பூசி வந்தால் போதும், முட்டிகளில் ஏற்பட்டிருக்கும் கருமை மற்றும் தழும்புகள் மாயமாய் மறைந்துவிடும்.

மஞ்சள்

மஞ்சள் உடலின் அழகை, மினுமினுப்பு தன்மையை அதிகரிக்க வல்லது.
மேலும் பால் மற்றும் தேன் உடலிற்கு ஈரப்பதம் மற்றும் பொலிவை தரும்.

தேவையானவை

தேன் – 1 தேக்கரண்டி

பால் – 2 தேக்கரண்டி,

மஞ்சள்- 1 தேக்கரண்டி

செய்முறை

இந்த மூன்றையும் ஒன்றாய் சேர்த்து நன்றாக கலந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை முட்டிகளில் பூசி வந்தால் போதும், முட்டிகளில் ஏற்பட்டிருக்கும் கருமையும், தழும்புகளும் உடனடியாக மறைந்து விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை உடலை சுத்தம் செய்து, தேகத்தை மெருகூட்டும் காரணியாக உள்ளது.

தேவையானவை

எலுமிச்சை சாறு- தேவையான அளவு

செய்முறை

எலுமிச்சைசாறினை கருமை உள்ள இடங்களில், பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் பூசினால் அது சருமத்தில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்கி, சருமம்பொலிவு பெற உதவும். இதை தினந்தோறும் அரை அல்லது ஒரு மணிநேரம் பூசி ஊறவைத்து கழுவினால் போதும்.

தயிர்

தயிர் மற்றும் வினிகர் இந்த இரண்டையும் ஒன்றாய் கலந்து பயன்படுத்தினால், அது சருமத்தில் ஒளிந்துள்ள அழுக்குகளையும், சருமத்தின்
இறந்த செல்களையும் நீக்க உதவும்.

தேவையானவை

தயிர்- 1 தேக்கரண்டி,

வினிகர்- 1 தேக்கரண்டி

செய்முறை

இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து, நன்றாக கலந்து தினந்தோறும் கருமை நிறைந்த முட்டிகளில் பூசினால், சருமத்தின் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, சருமம் பளிச்சிட உதவும். இதை 15-30 நிமிடங்களின் பின் கழுவுதல் வேண்டும்.

உருளைகிழங்கு

உருளைகிழங்கு சருமத்தின் கருமை மற்றும் தழும்புகளை போக்குவதை தன் இயல்பாகக் கொண்டது.

தேவையானவை

உருளைக்கிழங்கு – 1

செய்முறை

உருளைகிழங்கு துண்டுகளை சருமத்தின் கருமை மற்றும் தழும்புகள் நிறைந்த இடங்களில், முட்டிகளின் கருமை நிறைந்த பாகங்களில் பூசி 15-30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது சருமத்தின் கருமையை போக்கி, உடல் பொலிவை ஏற்படுத்த உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி கணவனிடம் எதிர்ப்பார்க்கும் விடயங்கள்..!!
Next post காட்டுப்பகுதியில் காத்திருந்த திடுக்கிடும் சம்பவம்..!!