மீண்டும் ஜனாதிபதியானார் முனங்காக்வா!!(உலக செய்தி)

Read Time:4 Minute, 31 Second

சிம்பாப்வேயில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி எமர்சன் முனங்காக்வா, மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை சிம்பாப்வே தேர்தல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

நாட்டில் உள்ள 10 மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முனங்காக்வா 50.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசா 44.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அறிவிக்கப்பட்டத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் நிராகரித்த போது, பொலிஸ் அதிகாரிகள் தேர்தல் திணைக்கள வளாகத்தை விட்டு அவர்களை வெளியேற்றினர். வாக்கு எண்ணிக்கையை சரிபார்க்க முடியவில்லை என்கிறது சாமிசாவின் எம்.டி.சி. கூட்டணி.

50 சதவீதத்துக்கும் அதிகமாக மயிரிழை அளவு அதிக வாக்குகள் பெற்றதால் சாமிசாவுடன் இரண்டாம் கட்ட மோதலை எதிர்கொள்ளவேண்டிய தேவையை முனங்காக்வா தவிர்த்துள்ளார்.

முடிவுக்குத் தலைவணங்குவதாக டிவிட்டரில் கூறிய ஜனாதிபதி முனங்காக்வா, தேர்தல் முடிவுகளை புதிய தொடக்கம் என்று வருணித்திருக்கிறார். “தேர்தலில் நம்மிடையே பிளவு ஏற்பட்டிருந்தாலும், நம்முடைய கனவு ஒன்றே” என்றும் அவர் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

1980 இல் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 37 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே 2017 நவம்பரில் ஒரு கிளர்ச்சியின் மூலம் பதவி விலகும்படி செய்யப்பட்டார். இதை அடுத்து முகாபேவால் துணை ஜனாதிபதியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற முனங்காக்வா நாடு திரும்பினார்.

அவரை அந்நாட்டு நாடாளுமன்றம் அதிபராகத் தேர்ந்தெடுத்தது.

அதன் பிறகு நடந்த முதல் தேர்தலில் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடந்தது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 70 சதவீதம் பேர் இத்தேர்தலில் வாக்களித்தனர். ஆனால், தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் வன்முறையாக மாறியது. பாதுகாப்புப் படையினர் சுட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்தான் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. முன்னதாக வாக்குப் பதிவுக்கு மறுநாள் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் முன்பே சாமிசாவின் எம்.டி.சி. கூட்டணி தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தது. இதனால், அந்தக் கட்சி ஆதரவாளர்கள் பல இடங்களில் கொண்டாடத் தொடங்கினர்.

இதை ஆளும் ஜானு பிஎஃப் கட்சி மறுத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் எதிர்க்கட்சியினர் ஆத்திரமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது போன்ற போராட்டங்களை அரசு சகித்துக்கொள்ளாது என்று அறிவித்தார் உள்துறை அமைச்சர் ஒபர்ட் முபோஃபு. “போரில் கொல்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சிப்பாய்கள். குடிமக்கள் அரசின் எதிரிகளா?” என்று கேள்வி கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சாமிசாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம் – நான் சந்தர்ப்பவாதி அல்ல! (சினிமா செய்தி)
Next post லாபத்துக்காக கடைக்காரர் செய்த அசிங்கத்தை நீங்களே பாருங்க!(வீடியோ)