அடிப்படையான உடற்பயிற்சிகள்!!(மருத்துவம்)

Read Time:6 Minute, 34 Second

உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். அவைகள் என்னென்னவென்பதை அறிந்துகொள்வோம்…

* Pull Ups

ஜிம்முக்குச் செல்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய அடிப்படையான, முக்கியமான ஒரு பயிற்சிதான் Pull Ups. இப்பயிற்சி செய்கிறபோது கைகளால் கம்பியை பிடித்து கீழே தொங்கிய நிலையிலிருந்து, உடலை மேலே தூக்கிச் செல்ல வேண்டும். இது சிறுவர்கள் முதல் ஜிம்முக்கு செல்கிற அனைவரும் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பயிற்சியாக இருக்கிறது. இப்பயிற்சியால் Wings என்கிற பகுதி, தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.

* Dips

Dips என்கிற இந்த பயிற்சியில் இரண்டு கம்பிகளின் மத்தியில் கால்களை தொங்க விட்டோ அல்லது மடக்கிய நிலையிலேயோ கம்பிகளின் மேலிருந்து கீழே இறங்கி மேலே செல்ல வேண்டும். இது அடிப்படையான, மிகவும் முக்கியமான ஒரு பயிற்சியாக இருந்து வருகிறது. இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.

* Shoulder

தோள்பட்டை (Shoulder) அல்லது புஜம் வலுவடைவதற்கான பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சியின்போது இரண்டு கைகளிலும் தம்பிள்ஸ் வைத்துக்கொண்டு கைகளை பக்கவாட்டில் மேலும் கீழுமாக தூக்கி இறக்க வேண்டும்.

* Bench

மார்புப் பகுதியை வலுப்படுத்த செய்கிற பயிற்சியை Bench என்று சொல்கிறோம். இப்பயிற்சி செய்வதற்குரிய இடத்தில் படத்தில் இருப்பதுபோல் படுத்த நிலையில் மார்புப் பகுதிக்கு மேல் எடையை மேலும் கீழுமாக முழுமையான நிலையில் தூக்கி இறக்க வேண்டும். கால்களை படத்தில் இருப்பதுபோல மேலே மடக்கியோ அல்லது கீழே தரையில் ஊன்றியவாறோ வைத்து செய்யலாம். கால்களை மேலே வைத்து செய்வதால் வயிற்றுப் பகுதியும் வலுவடைகிறது. இப்பயிற்சியின்போது அதிக எடை தூக்கும்போது அருகில் ஒருவரை உதவிக்கு வைத்துக்கொள்வது நல்லது.

* Squat

கால்களை வலுப்படுத்த செய்கிற முக்கியமான பயிற்சி Squat. இப்பயிற்சி செய்கிறபோது எடையை பின்புற கழுத்தின் மீது வைத்தவாறு கைகளால் பிடித்துக்கொண்டு, மெதுவாகவும், முழுமையாகவும் கீழே உட்கார்ந்து எழும்ப வேண்டும். பெரும்பாலானோர் இப்பயிற்சியை செய்யாமல் தவிர்த்து விடுகிறார்கள். இப்பயிற்சி செய்வதால் ஆண்களின் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதோடு, ஆண்களின் ஒட்டுமொத்த உடலின் வலுவும் அதிகரிக்கிறது. கால்களுக்கான இந்த பயிற்சி செய்வதால் உடலின் மேல்பாகவும் சீராக இருக்கும்.

* Biceps

கைகளின் மேல்பாகத்திலுள்ள Biceps என்கிற பகுதியை வலுப்படுத்துவதற்கு தம்பிள்ஸ் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். இப்பயிற்சி செய்கிறபோது தம்பிள்ஸை மேலும் கீழுமாக மெதுவாக தூக்கி இறக்க வேண்டும். இப்பயிற்சியின்போது கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற உடல் பாகங்களை பயன்படுத்துவதோ, உடல் முழுவதையும் அசைப்பதோ கூடாது. அப்படி கைகளை மட்டுமே பயன்படுத்தி தூக்க முடிகிற எடையை முதலில் தூக்க வேண்டும். இதேபோல் சரியாக செய்து படிப்படியாக எடையை அதிகப்படுத்த வேண்டும்.

* Abs

வயிற்றுப் பகுதி (Abs) வலுவடைவதற்காக செய்கிற சிக்ஸ்பேக் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி செய்கிறபோது கம்பியில் கைகளால் பிடித்துக்கொண்டு கீழே தொங்கிய நிலையில், இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து மேலே தூக்கி கீழே இறக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்புக்கு நேராக நீட்டி மடக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்பின் பக்கவாட்டு புறத்திலும் மடக்கி நீட்டலாம்.

இவற்றை நினைவில் கொள்ளுங்கள்…

* Pull Ups, Bench, Squat, Shoulder, Biceps போன்ற அனைத்து பயிற்சிகளையும் அரை குறையாக செய்யக்கூடாது. சரியான முறையில் முழுமையான இயக்கத்துடன் செய்ய வேண்டும். இப்பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்லது. அதிக பளு தூக்கும்போது அதற்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து சற்று வேகமாக தூக்கலாம்.

ஆனால், அதன் பிறகு பளுவை இறக்கும்போது மெதுவாக இறக்க வேண்டும். இதனால் நாம் பயிற்சி மேற்கொள்கிற அந்த குறிப்பிட்ட தசைகள் நல்ல வலுவடைகிறது. தம்புள்ஸ், ஸ்குவாட், பெஞ்ச் போன்ற பயிற்சிகளை செய்யும்போது அதிக வேகத்துடன் செய்யக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்ல பலனளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி கொலை முயற்சி – 6 பேர் கைது !!(உலக செய்தி)
Next post பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% தான்!!(அவ்வப்போது கிளாமர்)