உடலினை உறுதி செய் !!(மருத்துவம்)

Read Time:11 Minute, 49 Second

கவர் ஸ்டோரி

ஃபிட்னஸ் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி, வெற்றிகரமான வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமான ஒன்று. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறுவதோடு சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வும் பெறலாம். மேலும் இதன் மூலம் உடலும் மனமும் வலுப்பெற்று நமது வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வமும், அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு வலியுறுத்திக் கொண்டும் இருக்கும் பொதுநல மருத்துவர் சுரேஷ்குமாரிடம் இதுபற்றிப் பேசினோம்…ஃபிட்னஸின் அவசியம், ஜிம்முக்குப் போகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், தன்னுடைய தினசரி பயிற்சிகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

உடற்பயிற்சிகள் ஏன் செய்ய வேண்டும்?

‘‘விவசாயிகள், மீனவர்கள் போன்ற பிற உடல் உழைப்புமிக்க பணி செய்கிறவர்களுக்கு அவர்கள் செய்கிற வேலைகளின் மூலமே உடல் வலுவடைகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முற்றிலும் Sedentary life style என்கிற வாழ்க்கை முறையாக இருக்கிறது. அதனால் உடல் உழைப்பின்றி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தவாறு, கணினி போன்ற பிற பணிகள் செய்கிறவர்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சிகள் அவசியம் தேவைப்படுகிறது. இதனை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

Be Act, Start a nice time இதுபோன்ற வார்த்தைகளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துகொண்ட நபர்களிடம் மருத்துவர்கள் சொல்வதுண்டு. அதாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் வலிமை பெறுவதற்குரிய பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்வது அவசியம்.

மனிதர்கள் பொதுவாகவே ஒரு வேலையை செய்வது, நடப்பது என்று ஏதாவது ஒரு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது அவசியம். ஆனால், எந்த இயக்கமும் இன்றி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருப்பதுதான் நோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே, நோய்களின்றி நலமுடன் வாழ உடற்பயிற்சிகள் அவசியம். Sitting is the new smoking என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிற அளவுக்கு அதிகப்படியான நேரங்கள் அமர்ந்த நிலையிலேயே இருக்கிறோம். இந்த அபாயத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றே சொல்லலாம்.’’

உடற்பயிற்சிகளின் பயன்கள் என்ன?

‘‘உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கவும், ரத்தத்திலுள்ள கொழுப்பு சத்துக்களை சரி செய்யவும், தசைகள் வலுப்பெறவும் உடற்பயிற்சிகள் உதவுகிறது. மேலும் அது உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை எரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தகுந்த உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.’’

உடற்பயிற்சியில் உங்களது அனுபவங்கள்…

‘‘பொதுமக்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும் சொல்கிற மருத்துவர்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இல்லாவிட்டால் ‘டாக்டருக்கே உடம்பு சரியில்லையா’ ‘டாக்டரே ஃபிட்டா இல்ல. நாம ஏன் அலட்டிக்கணும்’ என்று சாதாரணமாகக் கிண்டலடித்துவிட்டு நம்மை காலி செய்துவிடுவார்கள். அதனால், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். உணவில் கவனம் செலுத்துவதைப் போலவே உடற்பயிற்சியிலும் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.

நான் 16 வருடங்களாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன். அதோடு Martial art என்று சொல்கிற தற்காப்புக்கலைப் பயிற்சிகளையும் செய்து வருகிறேன். தற்காப்புக்கலைப் பயிற்சிகள் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுவதோடு, உடல் வலிமையையும் அதிகப்படுத்துகிறது.

நான் தற்காப்புப் பயிற்சிகளை வாரத்தில் மூன்று நாட்களும், ஜிம்முக்கு சென்று செய்கிற பயிற்சிகளை வாரத்திற்கு 6 நாட்களும் செய்து வருகிறேன். இப்பயிற்சிகளால் உடலில் வேகமும், நெகிழ்வுத்தன்மையும் அதிகமாகிறது. தற்காப்புப் பயிற்சிகள் செய்பவர்களும்கூட உடல் தசைகள் மற்றும் எலும்புகளின் வலுவை அதிகரிப்பதற்காக ஜிம் சார்ந்த பயிற்சிகளையும் செய்வதுண்டு.

இதுபோன்ற பயிற்சிகள் செய்பவர்கள் சரியான உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். நான் அரிசி வகை உணவுகள் அதிகமாக சாப்பிடுவதில்லை. புரதச்சத்துள்ள மீன் உணவுகள், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை நான் செய்கிற பயிற்சிகளுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்கிறேன்.’’ஜிம்முக்கு செல்பவர்களுக்கு உங்களுடைய ஆலோசனைகள் என்ன?

‘‘நான் பாடி பில்டராக வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது உடல் பருமன் போன்ற பிற உடல்நல பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பது போன்ற ஏதாவது ஒரு நோக்கத்தோடு ஜிம்முக்கு போக வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குரிய சரியான முறைகளைப் பின்பற்றி உரிய நபர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது அவசியம். உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதுமான நேரத்தை முதலில் ஒதுக்கிவிட வேண்டும். அந்த நேரத்தில் வேறெந்த பணிகளும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

புதிதாக ஜிம்முக்கு செல்லும் நபர்கள் தாமாகவே ஆர்வக் கோளாறில் அதிக எடை தூக்குவது, அதிக எண்ணிக்கைகள் செய்வது என்று தாமாகவே உடற்பயிற்சிகள் செய்வது தவறு. இதனால் உடலில் அடிபட்டு காயங்கள் ஏற்படவோ, உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே, தகுந்த உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனைப்படி அவரவர் உடல் திறன் மற்றும் உடல் நிலைகளுக்கேற்ப படிப்படியாக எடைகளையும், எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்துவதே சரியாக இருக்கும்.’’ஃபிட்னஸ் விஷயத்தில் இளைஞர்கள்
செய்கிற தவறுகள் என்ன?

‘‘ஜிம்முக்குச் சென்ற ஒரு மாதத்திலேயே உடல் தசைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது. இன்று இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பும் சிக்ஸ்பேக் உடலமைப்பு உடனடியாக வந்துவிடாது. அதற்குரிய உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து செய்து வந்தால்தான் அந்த உடலமைப்பைப் பெற முடியும்.

புதிதாக ஜிம்முக்கு செல்பவர்கள் குறைந்தது 1 வருடம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் ஓரளவு மாற்றங்கள் தெரியும். ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு 20 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். அதன்பிறகு தொடர்ந்து பயிற்சி செய்கிறபோது மெதுவாகவும், படிப்படியாகவும்தான் தசைகளில் மாற்றங்கள் ஏற்படும்.

கடுமையான அளவில் உடற்பயிற்சி செய்கிற நபர்கள் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி சரியான உணவு முறைகளைப் பின்பற்றுவதோடு போதுமான நீர் அருந்த வேண்டியது மிகவும் அவசியம். திடீரென்று ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்கிறபோது உடலின் தசைகளில் வலி உண்டாகும். அதற்காக உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது சரியல்ல. அந்த வலியைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து
அப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

அதன்பிறகு வலி சரியாகி உடல் தசைகள் படிப்படியாக வலுவடையத் தொடங்கும். வலியைத் தாங்கப் பழகிக் கொண்டால் உடல் வலிமையாகும் என்பதை ஜிம்முக்குப் புதிதாக போகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’வேறு ஏதேனும் முக்கிய ஆலோசனைகள்? ‘‘ஃபிட்னஸ் பயிற்சிகள் தேவைப்படும் நபர்கள் அதற்குரிய உடற்பயிற்சி நிபுணர், ஊட்டச்சத்து நபுணர் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகளின்படி பயிற்சிகள் மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

தன்னிச்சையாக கற்றுக் கொள்ள நினைப்பதையோ, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கும் வாய்ப்புகள் இருப்பதால் அதனை அறியாமையோடு பயன்படுத்தக் கூடாது. ரத்தம் மற்றும் உடல் ஹார்மோன் சுரப்புகளின் நிலையை மருத்துவர் ஆலோசனைப்படி பரிசோதித்த பிறகு அவரவர் உடல்நிலைக்கேற்ற உடற்பயிற்சிகள், உணவு முறைகளைப் பின்பற்றுவது மிகவும் நல்லது. தொடக்கநிலை பயிற்சியாக ஓட்டப் பயிற்சிகள் செய்வதைவிட, வேகமான நடைப்பயிற்சி மிகவும் நல்லது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காம பேச்சு பேசும் சென்னை பெண் – பெண்கள் பார்க்காதிங்க!!(வீடியோ)
Next post உணவுகளின் நிறமும் ஆரோக்கியமும்!!(மகளிர் பக்கம்)