மிக்சியை பாதுகாப்பது எப்படி ?(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 57 Second

இன்று மிக்சி இல்லாதவர்கள் வீட்டை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ளது. மிக்சியை எவ்வாறு பராமரிக்க வேண்டும். எவ்வாறு பராமரித்தால் அந்த மிக்சி பல வருடங்களுக்கு வரும் என்பதைப் பார்க்கலாம்.

* மிக்சியை பயன்படுத்தும்போது லோ பவராக இருந்தால் பயன் படுத்தக்கூடாது. அப்படி பயன் படுத்தினால் மிக்சியில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் பழுதடைந்து விடும்.

*மிக்ஸரில் லோட் ஏற்றும்போது மூன்றில் இரண்டு பங்குதான் போட ேவண்டும். அதிகமாக லோட் செய்தால் மிக்சி கெட்டு விடும்.

* ஜாரில் போட்டு அரைத்து முடித்ததும், உடனே அதில் தண்ணீர் ஊற்றி மிதமான வேகத்தில் வைத்து ஒரு சுற்று சுற்றி அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது சுத்தம் செய்யலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்து போடக்கூடாது.

* மாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைப்பதால் மிக்சி எளிதில் பழுதாகி விடும்.

*மிக்சியின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்சியில் போட்டு ஓரிரு நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகி விடும். மிக்சி பிளேடுகளை சாணை வைக்கவே கூடாது. மிக்சி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும்.

*ஜாடிகளின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாடியை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்சியில் பழுது ஏற்பட்டு விடும்.

*மிக்சி இயங்கிக்கொண்டிருக்கையில் மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும். மிக்சி ஓடும் போது திறந்து பார்க்கக்கூடாது. சூடான பொருட்களை மிக்சியில் அரைக்கக் கூடாது. மிக்சியில் அரைக்கும்போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

*அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட் செய்து கொள்ள வேண்டும். மிக்சியில் ஜார்களின் அடிப்பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மிக்சி பழுதாகி விடும்.

*அரைக்கும் பொருட்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம். இட்லிக்கு மிக்சியில் அரிசி அரைக்கும்போது இரவே ஊறவைத்து விட்டால் மிக சீக்கிரமாக அரைத்து விடலாம். அத்துடன் மிக்சி சூடாவதையும் தடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெட்டகமே இல்லாம மார்பகத்த குலுக்குறாங்கப்பா!!(வீடியோ)
Next post பிராய்லர் பிராப்ளம்!!( மருத்துவம்)