ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா? (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 12 Second

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.

‘காலா’ படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக எடுக்கின்றனர். சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக தகவல்.

இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் திரிஷா இருப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். திரிஷா இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்று அடிக்கடி கூறி வந்தார்.

ரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை படத்தில் சித்தரித்து இருப்பதாகவும் இந்த வருடம் இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுனாமிக்கு பிறகு கரையொதிங்கிய 5 மர்ம விலங்குகள்!!(வீடியோ)
Next post முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக பிணை!!( உலக செய்தி)