ரமணனுக்கு கேணல் நிலையளித்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு

Read Time:2 Minute, 7 Second

LTTE.ramanan_s_2.gifமட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி”யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்தளபதியும் புலிகளின் கிழக்குமாகாண துணைத்தளபதியுமான ரமணன் கொல்லப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இன்று புலிகளின் கிழக்குமாகாண துணை இராணுவத் தளபதி ரமணனுக்கு கேணல் நிலையளித்து விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த கந்தையா உலகநாதன் உலகம் என்று அழைக்கப்படும் இவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு இணைந்தார்.

இதுவரை விடுதலைப் புலிகள் அமைப்பில் நான்கு கேணல் நிலையிலான மூத்த தளபதிகள் சாவடைந்துள்ளனர். வங்கக்கடலில் சாவடைந்த கேணல் கிட்டு, முல்லைத்தீவில் ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் சாவடைந்த கேணல் சங்கர், புற்றுநோயால் சாவடைந்த கேணல் ராயூ ஆகியோர் முன்னர் சாவடைந்த மூத்த தளபதிகள் ஆவர்.

மற்றுமொரு கேணல் தரத்திலான புலிகளின் முன்னைநாள் மூத்ததளபதியான கருணாஅம்மான் புலிகளில் இருந்து பிரிந்து சென்று தமிழீழமக்கள் விடுதலைப்புலிகள் (ரிஎம்விபி) எனும் அமைப்பை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள
Next post ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு