என்னை பதவிநீக்கம் செய்தால் பொருளாதாரம் சீர்குலையும்!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 56 Second

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை நீதிமன்றில் ஒத்துக்கொண்டார். டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் வங்கிமோசடி வழக்கில் குற்றவாளி என நீிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட சம்பவங்களால் டிரம்ப் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த டிரம்ப், தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார். ‘எல்லா வேலையையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவியிலிருந்து நீக்க முடியும் என எனக்கு தெரியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?( அவ்வப்போது கிளாமர்)
Next post சின்னத்திரையின் உண்மையான ஜோடிகள்!!( வீடியோ)