மற்ற ஆண்களுடன் அந்த படத்தில் நடித்தால் கணவருக்கு பிடிக்காது! (சினிமா செய்தி)
நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். தற்போதும் அவர் பெயர் தான் கூகிள் தேடலில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் அவர் கணவர் எப்படி நீல படங்களில் நடித்ததை எடுத்துக்கொண்டார் என சன்னி லியோன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மற்ற ஆண்களுடன் அந்த படத்தில் நடித்தால் என் கணவருக்கு பிடிக்காது, அதனால் அவரே என்னுடன் நடிக்க துவங்கினார். மேலும் அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை துவங்கினோம் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கணவர் டேனியல் வெபரை ஒரு பார்ட்டியில் தான் சந்தித்தாராம். பார்த்தவுடன் சன்னி லியோன் மீது காதலில் விழுந்துவிட்டாராம். பின்னர் அவரின் ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பி இருவரும் பேச துவங்கினார்களாம். பின்னர் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தற்போது திருமணமாகி 7 வருடம் ஆகும் நிலையில் இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
Average Rating