சென்னை மெட்ரோ இனி பெண்கள் கையில்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 55 Second

பெண் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து கண்ட்ரோல் ரூமில் ரயிலைக் கட்டுப்படுத்துவதும் பெண்கள் என்ற நிலையில் இயங்கிக் கொண்டிருந்த சென்னை மெட்ரோ இந்த ஆகஸ்ட் முதல் பெண்களுக்கென மேலும் சில சிறப்புக்களை சேர்த்து இயங்கத் துவங்கியுள்ளது.
மீனம்பாக்கம் விமானநிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமானநிலையம் முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சில, பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

சென்னையில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை கோயம்பேடு மட்டும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் என்பதை முன்னிறுத்தும் வகையில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்தும் விதமாக, பெண்களை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கைகள். இனி இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் ஆண் ஊழியர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள்.

நிலையத்தில் அறிவிப்பு செய்வதில் துவங்கி, பயணச்சீட்டு வழங்குதல், பயணிகளை கையாளுதல், கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, வாடிக்கையாளர் சேவை, ரயில் நிலையத்தைப் பராமரிப்பது, துப்புரவுப் பணி என அனைத்து வேலைகளிலும் முழுக்க பெண்களே உள்ளனர். ஷிப்ட் அடிப்படையில் ஒரு ரயில் நிலையத்தில் மொத்தம் 15 பெண்கள் பணியில் இருக்கிறார்கள். பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சிசிடிவி கண்காணிப்பு மூலமான பாதுகாப்பு மெட்ரோ ரயில் நிலையங்களில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

வாகன நெரிசலில் சிக்கிச் சிதைந்த சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான வரவு சென்னை மெட்ரோ. முழுவதும் நவீனமயமான, குளிரூட்டப்பட்ட பெட்டிகளின் நெரிசலற்ற இருக்கைகளில், டென்ஷன் துளியுமின்றி, சென்னையின் மொத்த அழகையும் உள்வாங்கி, தூரங்களை நிமிடங்களில் கடந்து பயணிப்பது தனி சுகமே. அதிலும் நாம் பயணிக்கும் இந்த மெட்ரோ ரயிலை பெண்கள் இயக்குகிறார்கள் என்ற செய்தி கூடுதல் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், பெண்கள் மட்டுமே பயணிப்பதற்கென்றே தனி பெட்டியும் தற்போது இதில் இணைக்கப்பட்டுள்ளது.சாதனையோ, சாகசமோ எந்த எல்லையையும் தொடும் துடிப்பில் இன்றைய இளம் பெண்கள் களம் காண்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகு தரும் வைட்டமின்!!( மருத்துவம்)
Next post ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!!(மகளிர் பக்கம்)