By 3 September 2018 0 Comments

கூந்தலை புரிந்துகொள்வோம்!!(மருத்துவம்)

கூந்தல் உயிரற்றது என்றாலும், அது உயிர்ப்புடன் இருக்கும் வரையில்தான் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காகத்தான் விதவிதமான பொருட்கள், ஆயிரக்கணக்கில் செலவாகும் சிகிச்சைகள், லட்சத்தை வாரி இரைத்து செய்யும் விளம்பரங்கள் என கூந்தலை வைத்து பிரம்மாண்டமான சந்தையே இயங்கி வருகிறது.

இத்தனைக்கும் காரணம் பொதுமக்களிடம் இருக்கும் முக்கியமான குழப்பம்தான். முடி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டால் யாரிடம் கேட்பது என்ற தெளிவு நம்மிடம் இல்லை. சாதாரணமாக சலூனில் இருக்கும் ஹேர்ஸ்டைலிஸ்ட்டிடம் ஆரம்பித்து கூந்தலுக்கென்று பிரத்யேகமாக Trichologist-டிடம் வரைகூட எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். பலவிதமான சிகிச்சைகளை முயற்சிக்கிறார்கள்.

ஆனால், சரும நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும், சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. சரும நல மருத்துவர் என்பவர் தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பவர் என்று மட்டுமே நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. சகலமும் அறிந்தவரே சரும நல மருத்துவர் என்ற முன்னுரையுடன் கூந்தல் பற்றிப் பார்ப்போம்…

பாலூட்டிகளின் தோலை பாதுகாக்க உள்ளது முடி. ஆனால், மனிதனுக்கு மட்டுமே தலையை பாதுகாப்பதாக உள்ளது. ஒருவரது முடியைப் பார்த்து அவருடைய உடல்நலம், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த சமூக அந்தஸ்தை உடையவர் என்று கூறிவிட முடியும்.
பொதுவாக, நம் தலையில் 1,00,000 முதல் 1,50,000 வரை முடிகள் உள்ளன. ஒரு நாளைக்கு அரை மில்லி மீட்டர் (0.45mm/ நாள்) அளவு முடியின் வளர்ச்சி இருக்கும்.

முடியின் விட்டத்தின் அளவைப் பொறுத்து அதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.Vellus hair: விட்டம் < 0.3 மி.மீ., உடல் முழுவதும் இருப்பது, மெல்லியது, நிறம் சற்று குறைந்தது.Intermediate hair: விட்டம் 0.03- 0.06 மி.மீ. , Vellus hair-ன் அடர்த்தியை விட சற்று தடிமனானது, உடல் முழுவதும் இருப்பது Terminal hair: விட்டம் > 0.06 mm. இவ்வகை முடிதான் தலை, மீசை, தாடி, அக்குள் மற்றும் பிறப்புறுப்புகள் அருகில் இருப்பது.
முடியின் வளர்ச்சி பருவத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

Anagen Phase – வளரும் பருவம்
Catagen Phase – இடைப்பட்ட பருவம்
Telogen Phase – ஓய்வு எடுக்கும் பருவம்.

வளரும் பருவம் பொதுவாக இரண்டிலிருந்து 10 வருடம் வரை இருக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதனால்தான் ஒரு சிலருக்கு முடி நீளமாகவே வளராது. அவர்களுடைய கூந்தலின் வளரும் பருவம் 2-3 வருடம் வரைதான் இருக்கும். ஒரு சிலருக்கு நீளமான கூந்தல் இருக்கும். அவர்களது கூந்தலின் வளர்ச்சி பருவம் 8-10 வருடம் வரை இருக்கும்.

இடைப்பட்ட பருவமானது 1-3 வாரங்கள் இருக்கும்.ஓய்வு எடுக்கும் பருவம் 3 மாதங்கள் வரை இருக்கும். 90 சதவீதம் வளரும் பருவத்திலும், 1 சதவீதம் இடைப்பட்ட பருவத்திலும், 10 சதவீதம் ஓய்வு எடுக்கும் பருவத்திலும் இருக்கும்.இவற்றில் இன்னும் நுட்பமாகப் பார்த்தால் Exogen என்ற பருவம் முடி கொட்டுவதைக் குறிக்கும். Kenogen என்ற பருவம் முடி கொட்டியவுடன் உள்ள காலியான ஹேர் ஃபாலிக்கிலை குறிக்கும்.

ஒரு நாளைக்கு பொதுவாக 50 முதல் 100 முடி வரை கொட்டுவது நார்மலான விஷயம். முடியின் வளரும் பருவத்திற்கு ஏற்ப, மெலனின் உற்பத்தியும் இருக்கும். இடைப்பட்ட மற்றும் ஓய்வெடுக்கும் பருவங்களில் மெலனோசைட் செல்கள் கொட்டி விடும். வயதாக வயதாக மெலனோசைட் செல்களின் செயல்பாடு குறையும் என்பதால், முடி நரைக்க ஆரம்பிக்கும். 20 சதவீத முடி நரைத்தால்தான் நரைமுடி வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

முடி வளர்வதற்கு பல வளர்ச்சிக் காரணிகள் தேவைப்படும். ஆன்ட்ரோஜன்ஸ், தைராய்டு ஹார்மோன், ஈஸ்ட்ரோஜன்ஸ், ப்ரோலாக்டீன், இன்சுலின், இன்ஸீலின் போன்ற வளர்ச்சிக் காரணி -1, வைட்டமின்- D ஆகியவை ஆகும்.

என்ன ஷாம்பு,கண்டிஷனர் மற்றும் எண்ணெய் உபயோகிக்கலாம் என்று தெரிந்து கொள்வதற்கு முன் முடியை கொஞ்சம் புரிந்துகொள்வோம். முடியில் க்யூட்டிக்கல், கார்டெக்ஸ், மெடுல்லா என்ற மூன்று அடுக்குகள் உள்ளன.Cuticle: முடியின் ஒவ்வொரு இழையின் மீதும் ஓடு வேய்ந்தது போல் க்யூட்டிக்கில் இருக்கும். கார்டெக்ஸை பாதுகாப்பது, பளபளப்பு மற்றும் முடியின் தன்மை (மெல்லிய/அழுத்தமான முடி) போன்றவைகளை நிர்ணயிப்பது க்யூட்டிக்கலின் வேலை. க்யூட்டிக்கள் 6 முதல் 8 அடுக்குகள் உடைய ஓடுகள் போல முடியின் வேரில் இருந்து வேயப்பட்டிருக்கும்.

அதனுடைய ஒரு நுனி ஒட்டியும் (வேரின் பக்கம் இருக்கும் நுனி) மறு நுனி ஒட்டாமலும் இருக்கும். (முடியின் கீழ்பகுதியில்) இந்த க்யூட்டிக்கில் ப்ளீச்சிங், கலரிங், ஃபெர்மிங், ஸ்ட்ரைட்டனிங் போன்ற கெமிக்கல் வைத்தியம் செய்யும்போது வீணாகி விடும்.

Cortex: கார்டெக்ஸ் உள்ளே இருப்பது. அதுதான் முடியின் பலத்திற்கு முக்கிய காரணம். கார்டெக்ஸ் 40 சதவீதம் Sulfur rich matrix மற்றும் 60 சதவீதம் Low sulfur alpha keratin போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த மெட்ரிக்ஸ்களுக்கு இடையே உள்ள வேதியியல் பிணைப்புகள் – Disulfide bonds, Hydrogen bods, Vander waals interactions மற்றும் salt links போன்றவை. இதில் Disulfide bonds மிக முக்கியம்.

அவைகள்தான் முடிக்கு வடிவம், திடத்தன்மை மற்றும் பலத்தை கொடுக்கின்றன. முடியை Permanent Straightening மற்றும் Permanent perming செய்யும்போது இந்த Disulfide bonds உடைந்துவிடும். மற்ற பலமற்ற பிணைப்புகளான Hyrogen bonds மற்றும் Salt links சாதாரண தண்ணீர் பட்டாலே உடைந்துவிடும். இவைகள்தான் temporany hair straightening அல்லது ஹேர் ட்ரையர்ஸ் அல்லது ரோலர்ஸ் உபயோகிக்கும்போது மாறிவிடும்.
Medulla : இது மிக மெல்லிய உள்பகுதி. இழை சற்றே பெரிதாக உள்ள முடியில்தான் இது தெரியும்.

கூந்தலுக்கு என்று உள்ள சில தனித்தன்மைகளைப் புரிந்துகொள்வோம்.Elasticity : முடியை இழுத்தால் கொஞ்சம் நீளம் அதிகமாகும். பின்பு அதன் பழைய நிலையை அடையும். ஆனால், 30 சதவீதத்திற்கு மேல் முடியை இழுத்தால் அது உடைந்துபோகும்.

Porosity : தண்ணீரில் இருக்கும்போது முடி தன் எடையைப் போன்று 30 சதவீதம் தண்ணீரை உறிஞ்சும். அதன் நீளம், விட்டம் போன்றவை சற்று அதிகமாகும். முடி கொஞ்சம் வீக்கம் அடையும். அப்போது சில பொருட்களை உள்ளே விடவும், ஊடுருவவும் அனுமதி அளிக்கிறது. இதைத்தான் ஹேர் டை அடிப்பதற்குப் பயன்படுத்துகிறோம்.

Plasticity : முடிக்கு நெகிழும் தன்மை உள்ளது. அதனால்தான் கொஞ்சம் முடியை நீங்கள் பென்சிலில் சுற்றி ஈரத்துடன் இறுக்கமாக வைத்து அதை அப்படியே காய வைக்கும்போது புது Hydrogen bonds உருவாகி அடுத்த தடவை தண்ணீரில் கழுவும் வரை சுருண்டு இருக்கும்.

Static Electricity : அதாவது முடி Triboelectric. வறண்ட முடியில் உராய்வு ஏற்பட்டால் அது எலக்ட்ரிக்கலாக சார்ஜாகிவிடும். அதனால்தான் வறண்ட முடியை சீப்பு வைத்து சீவும்போது அது சீப்பில் ஒட்டிக்கொள்வதை உணர்கிறோம். எண்ணெய் தடவிய பிறகு தலைவாரினால் இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam