ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உட்பட 102 பேர் கைது!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 39 Second

எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவில் கடந்த 2016-2017 ஆம் ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நேற்று (05) காலையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை செயலாளர் கனகராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் விளாத்திகுளம் துணை பொலிஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெபராஜ், எட்டயபுரம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கலா, தாசில்தார் வதனாள், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் கவிதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் சாலைமறியலை கைவிடவில்லை.

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உட்பட 102 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவோடு மதுகுடித்தால் பாலுறவில் இன்பம்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post புது வசந்தம் பட நடிகை சித்தாராவின் தற்போதைய நிலை தெரியுமா?(வீடியோ)