பேருந்து விபத்தில் 21 பேர் பலி – 9 பேர் படுகாயம்!!(உலக செய்தி)
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
தெற்கு ஜாவா தீவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 4 பேருந்துகளில் அத்தீவில் அமைந்துள்ள சுற்றுலாப் பிரதேசமான சுகாபூமி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அதில் ஒரு பேருந்து, அதிக வளைவுகள் உடைய சாலையில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையுடைய இந்தோனேசியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.