தமிழுக்கு வரும் வடநாட்டு மாடல் அழகி !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 41 Second

நடிகர்கள் இயக்குனர் ஆகியிருக்கின்றனர். கதாசிரியர்களும் இயக்குனர்களாக பொறுப்பேற்று படங்கள் இயக்கியிருக்கின்றனர். தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி மு.புகழேந்தி இயக்குனராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்துக்கு, ‘வேதமானவன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. நீதிபதியாக இருந்தபோது தான் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இதன் கதையை அமைத்திருக்கிறார்.

தூக்கு தண்டனை கைதி விடுதலையாகி வருகின்றான். அவனை சமுதாயம் ஏற்கிறதா? என்பதை சஸ்பென்ஸ், காதல், வீரம், சோகம், நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பாடல் எழுதி தயாரிக்கும் பொறுப்பையும் மு.புகழேந்தியே ஏற்றிருக்கிறார். கதாநாயகனாக மனோஜெயந்த் நடிக்கிறார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாடல் அழகி ஊர்வசி ஜோஷி கதாநாயகியாக நடிக்கிறார். டெல்லிகணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.கண்ணன் ஒளிப்பதிவு. சவுந்தர்யன் இசை. இதன் படப்பிடிப்பு தாம்பரம், இரும்புலியூர், மணிமங்களம், பூந்தமல்லி, குந்தாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ஷூட்டிங்குக்கு லேட் ஆக கூடாதாம்’ தனி விமானத்தில் பறக்கும் கதாநாயகி !!(சினிமா செய்தி)
Next post நல்லூரானும் பொற்கூரையும்!!(கட்டுரை)