ராணி எலிசபெத்… சில சுவாரஸ்யமான தகவல்கள்!!(மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 41 Second

பிரிட்டிஷ் அரசி ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 530 மில்லியன் டாலர் (2016-ம் ஆண்டின்படி)

* எலிசபெத் ராணிக்கு லேட்டஸ்டாக மேலும் ஒரு கொள்ளுப்பேரன் பிறந்துள்ளான். அதாவது இளவரசர் வில்லியம்ஸுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

* சின்ன வயதில், பிரின்ஸ் பிலிப்புக்கு செல்லப் பெயர் முட்டைகோஸ் (Cabbage).

* ராணி எலிசபெத்துக்கு அவர் தந்தை மன்னர் ஜார்ஜ் வைத்த செல்லப்பெயர் லில்லிஃபெட் (Bet).

* எலிசபெத் தன்னுடைய 13 வயதில்தான் வெளிநாட்டுக்கு முதன் முதலாக போன் பேசினார். அவருடைய தந்தையும், தாயாரும் கனடா சென்றிருந்தனர். அவரிடம்தான் பேசினார்.

* இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை அதுவும் வெவ்வேறு நாடுகளில் துவக்கி வைத்த பெருமை அவருக்கு உண்டு. முதலில் 1976-ல் மாண்டரெலில் நடந்த ஒலிம்பிக்கை துவக்கினார். அடுத்து 2012-ல் இங்கிலாந்தில் நடந்த ஒலிம்பிக்கை துவக்கி வைத்தார்.

* 1982-ம் ஆண்டு, பல கெடுபிடிகளுக்கும் டிமிக்கி கொடுத்து, மைக்கல்பேகன் என்ற நபர், ராணி அறையில் நுழைந்துவிட்டார். ஆனால் அவரை ராணி மன்னித்துவிட்டார்.

* 1953-ல் எலிசபெத் ராணியாக பதவி ஏற்றார். அப்போது அவர் அணிந்திருந்த கவுனின் பின் அங்கியில், காமன்வெல்த் நாடுகளை பிரதிபலிக்கும் எம்பிராய்டரிகள் செய்யப்பட்டிருந்தன. இதில் இங்கிலாந்து ரோஜா, ஸ்காட்டிஸ் முட்செடி, கனடாவில் விறகுக்காக வளர்க்கப்படும் மர இலை, ஐரீஸ் மூன்று இலைகளைக் கொண்ட கிராம்பு செடியின் இலைகள், வேல்ஸ் அல்லி மலர் செடியின் பூ, ஆஸ்திரேலியன் வேலிக்கள்ளி, நியூசிலாந்து வெள்ளி பெரணி செடி இலை, தென் ஆப்பிரிக்கா ப்ரோடிவா செடி இலை, இந்தியா மற்றும் இலங்ைகயின் தாமரைகள் மற்றும் பாகிஸ்தானின் சணல் ஆகியவையும் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!!(மருத்துவம்)
Next post இதயம் காக்கும் நிலக்கடலை..!(மருத்துவம்)