விஷ சாராயத்துக்கு 21 பேர் பலி – பலர் கவலைக்கிடம் !!(உலக செய்தி)

Read Time:2 Minute, 16 Second

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது.

ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர்.

இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பொலிஸார் நடத்திய விசாரணையில், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். மற்றவர்கள் பங்காளதேஷ், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு பொலிஸார் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியானது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:!!
Next post அபிராமி – சுந்தரத்துக்கு என்ன தண்டனை ?(வீடியோ)