கோகைன் பயன்படுத்தியதால் இங்கிலாந்து ராணுவத்தில் சீக்கிய வீரர் பணி நீக்கம்!!

Read Time:2 Minute, 18 Second

இங்கிலாந்தில் ராணி எலிசபெத் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அணிவகுப்பில் தலைப்பாகை அணிந்து பங்கேற்ற சீக்கியர், கோகைன் பயன்படுத்தியதால் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் சரண்பிரீத் சிங் லால் (22). இவர் குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் இங்கிலாந்து சென்று குடியேறியது. கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் சரண்பிரீத் இங்கிலாந்து மட்டுமல்ல: உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் விழா கடந்த ஜூனில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது இங்கிலாந்து படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், சரண்பிரீத் சிங் லால் (22) தலைப்பாகையுடன் கலந்து கொண்டார். வீரர்கள் கருப்பு தொப்பி அணிந்து பங்கேற்ற நிலையில் சரண்பிரீத் மட்டும் தலைப்பாகையுடன் பங்கேற்றார். இதன்மூலம், அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். ஏனெனில், அரண்மனை அணிவகுப்பில் டர்பன் அணிந்து வீரர் பங்கேற்றது இதுதான் முதல் முறையாகும்.

ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமான சரண்பிரீத் சிங் தற்போது ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் வழக்கம் போல் வீரர்கள் முகாமில் நடந்த போதை மருந்து சோதனையில் சரண்பிரீத் அதிகளவில் கோகைன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சரண்பிரீத் உட்பட 3 வீரர்கள் கோகைன் பயன்படுத்தியதால் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்!(உலக செய்தி)
Next post விரிசலடையும் மனக்கசப்பு!!(கட்டுரை)