இது இளம் ஆண்களுக்கு போதாத காலம்!!(உலக செய்தி)

Read Time:3 Minute, 54 Second

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளைஞர்களுக்கு ´கடினமான´ மற்றும் ´மோசமான´ காலம் என்று கூறி உள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறாக கூறி உள்ளார்.

தாம் நியமித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், ´பழிவாங்கல்´ வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறி இருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிபதி பிரெட் கவனோவுக்கு அளிக்கும் ஆதரவுதான் விசாரணையை தாமதப்படுத்துவதாக எஃப்.பி.ஐ கூறி உள்ளது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி இதனை மறுக்கிறார்.

செனட் அனுமதி கிடைத்தால்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் பதிவேற்க முடியும். செனட் அனுமதி அளிக்குமென தாம் நம்புவதாக டிரம்ப் கூறி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் நேற்று உரையாற்றிய போது, “இதுவரை குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் நிரபராதி என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நிரபராதி என நிரூபிக்கும் வரை குற்றவாளியாக கருதும் போக்கு நிலவுகிறது. இது வித்தியாசமான மிக மோசமான நிலைப்பாடு,” என்று கூறினார் டிரம்ப்.

மேலும் அவர், “இது அமெரிக்க இளம் ஆண்களுக்கு மிக மோசமான காலகட்டம், செய்யாத தவறுக்கு பழி சுமக்கும் காலகட்டம்”

மிசிசிப்பி மாகாணத்தின் செளதவன் பகுதியில் நடந்த அரசியல் கூட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பேராசியர் கிரிஸ்டினை பெயர் குறிப்பிடாமல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கிண்டல் செய்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவில் இருக்காது என்று பொருள்தரும் வகையில் உரையாற்றிய அவர், குற்றம்சாட்டுகிறவர்கள் அரசியல் காரணங்களுக்காக அப்படிச் செய்வதாகவும், ஆட்களை நாசம் செய்ய அவர்கள் விரும்புவதாகவும் அவர்கள் மோசமானவர்கள் என்றும் அவர் கூறினார். உடனே கூட்டம் “கவானா வேண்டும்… கவானா வேண்டும்” என முழக்கம் எழுப்பியது.

தமக்கு 15 வயது இருந்த போது, 1982 ஆம் ஆண்டு பிரெட் கவனோ தம்மை பாலியல் வல்லுறவு செய்ததாக பேராசியர் கிரிஸ்டின் கூறி உள்ளார். அப்போது பிரெட்டுக்கு 17 வயது.

பேராசியர் கிரிஸ்டின் மட்டுமல்ல பல பெண்கள் பிரெட் கவனோ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளனர். அவர்களை எஃப்.பி.ஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரெட் மறுக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சற்றுமுன் COURTஇல் அபிராமியும் சுந்தரமும் செய்த செயலால் அதிர்ச்சியான நீதிபதி!!
Next post ராகுல் காந்தியை விரும்பிய நடிகை!! (சினிமா செய்தி)