மருந்தும் வேண்டாம் மாத்திரையும் வேண்டாம்!!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 29 Second

மூட்டு, முதுகுத்தண்டு வடம், கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் ஜிவ்வென வலி படுத்தும்போது அலறித் துடிப்பீர்கள்தானே. வலிக்குக் காரணம் எலும்பு பாதிக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு பிரச்சினையாக இருக்கலாம். வலி பொறுக்க மாட்டாமல் உடனடியாக மருத்துவர்களிடம் ஓடுவீர்கள். எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து மருந்துகளும் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படும். நாட்கள் நகர்ந்துகொண்டே போவது ஒருபுறம் என்றால், காசும் கரைந்துகொண்டே போகும். ஆனால் மருந்து மாத்திரையும் வேண்டாம்; ஆபரேஷனும் வேண்டாம். இருக்கவே இருக்கிறது 4-எம் ஆர்த்தோ தெரபி என்கிறார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் பாலகுமரன், வலி சார்ந்த எலும்பியல் பிரச்சினைகளுக்கு விஞ்ஞான முறைப்படி சிகிச்சை அளிப்பதில் பயிற்சியும் சர்வதேச அங்கீகாரமும் பெற்றவர்.

‘‘மூட்டு, முதுகு உட்பட உடலின் பல பகுதிகளில் எலும்புகள் பாதிக்கப்பட்டு ஏற்படும் வலிக்கு மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சையை ஒதுக்கிவிட்டு கைகளாலும் சிறப்பு பெல்ட்டுகள் கொண்டும் தரப்படும் சிகிச்சையே 4-எம் ஆர்த்தோ தெரபி எனப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரசித்தி பெற்ற இம்மருத்துவம் இப்போதுதான் இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது”.பாலகுமரனிடம் சிகிச்சை பெற்று குணமான திருமதி மகாலஷ்மி‘‘அமெரிக்கால செட்டில் ஆகிட்டாலும் பூர்வீகம் இந்தியாதான். கொஞ்ச வருஷமாவே ரெண்டு முழங்கால் மூட்டுக்கள்லயும் கடுமையான வலி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, ஆர்த்ரிட்டிஸ்ன்னாங்க, மற்றும் எலும்போடு ஒட்டியுள்ள ஜவ்வு கிழிந்துள்ளதுன்னு சொல்லி, மருந்து மாத்திரைகள் தந்தாங்க. ஆனா குணமாகலை. மருத்துவர்களை மாத்திப் பாத்தேன்.

மருந்து மாத்திரைகளையும் மாத்தி மாத்தி சாப்பிட வேண்டி வந்திச்சு. எதுலயும் குணமாகாததால கடைசியில பார்த்த மருத்துவர்கள் எல்லாருமே ஒரு சேர, ‘ஆபரேஷன்தான் வழி’ன்னு சொல்லிட்டாங்க. அதுலகூட 100 சதம் திருப்தியா இருக்குமான்னா அவங்களால உறுதியாச் சொல்ல முடியலை. என்ன பண்ணலாம்னு நான் முழிச்சிட்டிருந்த சமயத்துலதான் மருமகன் மூலமா பாலகுமரன் பத்தி கேள்விப்பட்டு சென்னை வந்தோம். அவர்கூட சில பல அமர்வுகள் மட்டும் தேவைப்பட்டுச்சு. பிரச்சினையை எனக்கு எளிமையா விளக்கினவர், சிகிச்சையை ஆரம்பிச்சார். முதல் நாளே எனக்கு இடதுகாலில் முழுமையான வலியும், வலதுகாலில் பாதி அளவு வலியும் குறைய ஆரம்பித்து பலன் எனக்குத் தெரிந்தது. முறையாக் கடைபிடிச்ச தொடர்ச்சியான சிகிச்சைகள் நல்ல பலனைத் தர இப்ப கால் வலி காணாமப் போயிடுச்சு.’’

பானுப்ரியா ‘‘நரம்புகள் அழுத்தப்பட்டு ஏற்பட்ட வலி அது. டிஸ்க் ப்ரொலாப்ஸ்ங்கிற அந்தப் பிரச்சினையைப் பத்தி நான் இதுக்கு முன்னால கேள்விப்பட்டதுகூட கிடையாது. முதுகு, கழுத்துன்னு ரெண்டு இடத்துல வலி வாட்டியெடுத்தபோது, மருத்துவர்கள்கிட்ட இருந்து எனக்கு கிடைச்சது, ஸ்கேன், மருந்து மாத்திரை, சரியாகலைன்னா ஆபரேஷன்ங்கிற அந்த ஒரே வார்த்தைதான். இக்கட்டான சூழல்ல நண்பர் ஒருத்தர் டாக்டர் பத்தி சொன்னார். இப்ப வலி ஏற்பட்ட இடத்துல நாலு குத்துவிட்டாக்கூட வலி தெரிய மாட்டேங்குதுன்னா பாருங்க. என்னால இப்ப குனிஞ்சு கூட தரையை முழுமையாகத் தொட முடியும். ஆரம்பத்துல நண்பர்கிட்ட ‘இப்படியெல்லாம் ஒரு சிகிச்சையும் இருக்காது’ன்னு கிண்டல் கேலி பேசின நான் இப்ப இந்த தெரபி பத்தி நாலு பேருக்காவது சொல்லணும்னு நினைக்கிறேன்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலஜென் குறைபாட்டினால் ஏற்படும் சரும பிரச்சனைகள்!!
Next post கடலில் மீனவர்கள் மீன் பிடிவளையில் இறால் பிடிக்கும் காட்சி!!(வீடியோ)