இந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்!!(மருத்துவம்)

Read Time:3 Minute, 39 Second

ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியமல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியமல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், பல் சிதைவு, பல்சொத்தை, பல்வலி போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும். ஒருசில உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் பற்களுக்கு நலம் சேர்க்கும்.

உடலின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க பழ வகைகள் சாப்பிடுவது நல்லது. எனினும் அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் அசிட்டிக் அமிலங்களை உள்ளடக்கிய பழங்களான ஆப்பிள், திராட்சை போன்றவை பற்களின் எனாமலை பாதிக்க செய்பவை. அவைகளை சாப்பிட்டதும் உடனே வாய் கொப்பளித்து பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

காபி பருகுவது பற்களுக்கு கேடு விளைவிக்கும். பல் சொத்தை மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும். அதனால் காபி குடித்து முடித்ததும் வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வது நல்லது.

ரொட்டிகளில் இனிப்பு சுவை குறைவாக இருந்தாலும் அவை பல் இடுக்குகளில் சிக்கிவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்தும். எந்த உணவை சாப்பிட்டாலும் உணவு துகள்கள் பல் இடுக்குகளில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சாக்லேட்டுகளை கடித்து ஆசுவாசமாக சுவைப்பது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதும் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆதலால் அவைகளை சாப்பிடும்போது பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தண்ணீர் அதிகம் பருகுவது பற்களுக்கு நல்லது. அதேவேளையில் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் பற்களுக்கு கேடு விளைவிக்கும். வாய் பகுதியையும் உலர்வடைய செய்துவிடும். பற்களின் எனாமலும் பாதிப்புக்குள்ளாகும்.

நொறுக்கு தீனி வகைகளையும் தவிர்க்க வேண்டும். அவை உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு பற் சிதைவுக்கும் காரணமாகிவிடும்.

மது குடிப்பதும் பற்களுக்கு கேடானது. மதுவில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உமிழ்நீர் சுரப்பின் அளவை குறைத்துவிடும். பற்களில் பாக்டீரியா தொற்றுகள், ஈறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு!!(கட்டுரை)
Next post கிச்சன் டைரீஸ்!!(மகளிர் பக்கம்)