தலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்!(உலக செய்தி)

Read Time:2 Minute, 8 Second

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார்.

இவரது கடவுச்சீட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

இதை தொடர்ந்து, மெஹுல் சோக்சிக்கு எதிராக பிணையில் விடுவிக்க முடியாத கைது பிடிவிராந்தை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. முன்னர் லண்டனில் இருந்ததாக நம்பப்பட்ட மெஹுல் சோக்சி அங்கிருந்து தப்பிச் சென்று, கரிபியன் நாடுகளான ஆண்டிகுவா பர்புடாவில் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கருப்புப் பணப் பதுக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள மெஹுல் சோக்சியின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மெஹுல் சோக்சி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பித்த வெடிப்பும் விளக்கெண்ணெயும்!!( மகளிர் பக்கம்)
Next post விளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை !!(மருத்துவம்)