கடும் போரினால் 58 பேர் பலி!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 42 Second

யெமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 22 ஆம் திகதி உள்நாட்டுப் போர் மூண்டது. 4 ஆவது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.

ஜனாதிபதி படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களத்தில் குதித்துள்ளன.

அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த நகரை மீட்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு வருகின்றன.

ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி படை வட்டாரங்கள் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பை காட்டி டப்ஸ்மாஷ் பண்ணும் ஆண்ட்டி இது எங்க போய் முடியுமோ | Falooda!!
Next post மார்பை கசக்குவது எல்லாம் ஒரு DUBSMASH – இந்த பொண்ணுங்க பண்ற அட்டூழியத்தை பாருங்க!!(வீடியோ)