சின்னச் சின்ன முந்திரியாம்!!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 9 Second

முந்திரிப்பருப்பு இயற்கையின் அதிசயம். இது வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார், புரதம் ஆகிய சத்துக்களை கொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது. முந்திரிப்பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. அதாவது 100 கிராம் முந்திரிப்பருப்பில் சுமார் 553 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும் தாவர வேதியங்கள் அல்லது பைட்டோ கெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்திரிப்பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான மோனோனாசட்-கொழுப்பு அமிலம் ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் இதய நோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறிய முடிகிறது.

முந்திரிப்பருப்பில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சில முந்திரிப்பருப்புகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே மேற்கூறிய கனிம தாதுக்கள் குறைபாட்டினால் வரக்கூடிய நோய்களை தடுக்கலாம். முந்திரிப்பருப்பில் உள்ள மெக்னீசியமானது எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் ரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

முந்திரிப்பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோயெதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது. முந்திரிப்பருப்பில் காப்பர் அதிக அளவில் உள்ளது. இது பல முக்கியமான நொதிகளுக்கு இணை காரணியாக செயல்படுகிறது. காப்பர், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களானது சைட்டோகுரோம் சி ஆக்ஸிடேஸ் மற்றும் சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் நொதிகளுக்கு இணை காரணிகளாக உள்ளது.

மேலும் காப்பரில் உள்ள தைரோசினேஸ் ஆனது, தைரோசினை மெலனின் ஆக மாற்றுகிறது. மெலனின் முடி மற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும் நிறமி ஆகும். முந்திரிப்பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு வளர்ச்சி, விந்து உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது. முந்திரிப்பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம், வைட்டமின் B5, பைரிடாக்சின், வைட்டமின் B6, ரிபோபிலாவின் மற்றும் தையமின், வைட்டமின் B1 அதிக அளவில் உள்ளன.

100 கிராம் முந்திரிப்பருப்பில் 0.147 மி.கி அல்லது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 33 சதவீத பைரிடாக்சின் உள்ளது. இத்தகைய வைட்டமின்கள் செல்களில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. முந்திரிப்பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது. பல்வேறு பயன்பாடுகள் உடைய முந்திரிப்பருப்பை உணவில் சேர்த்து உடல்நலம் காப்போம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !!(மருத்துவம்)
Next post கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்!!(கட்டுரை)