By 23 November 2018 0 Comments

வந்தாச்சு டெனிம் காலணிகள்!!(மகளிர் பக்கம்)

‘சரியான காலணிகள் அணிகிற ஒருத்தர் இந்த உலகத்தையே ஆளக்கூடியவர்’’.. .இப்படித்தான் அமெரிக்க பாடகியும், பாடலாசிரியரும், நடிகையும், மாடலுமான படத் தயாரிப்பாளர் பெட்டி மிட்லர் சொல்லியிருக்காங்க. இவர் இப்படி சொன்னதுதான் தாமதம் உலகம் எங்கிலும் விதவிதமான காலணிகள், வித்தியாச வித்தியாசமான டிரெண்ட்கள். இதோ அடுத்த டிரெண்ட் டெனிம் காலணிகள்.

டெனிம் மெட்டீரியல்களின் சிறப்பே அதன் வலிமையான தன்மைதான். ஒரு வாரம் துவைக்கவில்லை எனினும் அதன் தன்மை மாறாது, அவ்வளவு சுலபத்தில் கிழியாது. இதனாலேயே பேன்ட், கோட், ஜாக்கெட், ஷர்ட், ஸ்கர்ட், குர்தி, ஹேண்ட் பேக், பேக் பேக் இப்படி பல வகைகளில் டெனிம் மெட்டீரியல்களைப் பயன்படுத்துறாங்க. இதோ அடுத்த பரிமாணம் டெனிம் காலணிகள். அதிலும் ஜெனிபர் லோபஸ் மேலே ஒரு சட்டையும் கீழே ஜீன் பேன்ட் போன்றே ஒரு பூட்ஸ் போட்டுக்கொண்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு வர இணையத்தில் அவரின் காலணி தான் ஹாட் டாபிக். ஜீன் பேன்ட் போன்றே ஒரு காலணி நீண்ட நாட்களாக வாட்ஸப்பில் சுற்றி வருவதைப் பார்த்திருப்போம். இதென்ன புது டிரெண்ட் டிசைனர் யோகா கந்தசாமியை பிடித்தபோது, ‘ஸ்டேட்டஸைக் காட்டவே பெரும்பாலும் டெனிம் பூட்ஸ்களை பயன்படுத்துகிறோம்’ என்கிறார் இவர்.

“இங்கே டெனிம் சாண்டல்கள், ஸ்னீக்கர், ஹீல் ஷூக்கள், வெட்ஜஸ்கள் எல்லாமே எல்லாக் கடைகளிலும் கிடைக்குது. ஆனா டெனிம் பூட்ஸ்கள்தான் சில பிராண்டட் அல்லது ஹைடெக் ஆக்ஸசரிஸ் கடைகளில் கிடைக்கும். இல்லைன்னா ஆன்லைன்ல வாங்கிக்கலாம். இந்த ஃபுட்வேர்களுடைய மைனஸ் டிரெடிஷனல் உடைகள் கூட மேட்ச் செய்துக்க முடியாது. புடவை மற்றும் சல்வார்களுக்கு இந்த செருப்புகள் செட் ஆகாது. ஷார்ட் மினி ஸ்கர்ட், காக்டெயில் உடைகள், பென்சில் ஸ்கர்ட், ஷார்ட்ஸ் இப்படியான உடைகளுக்கு டெனிம் லாங் பூட்ஸ் போட்டுக்கலாம். முட்டி வரையான வெஸ்டர்ன் உடைகளுக்கு சாண்டல்கள், வெட்ஜஸ், ஸ்டிராப் ஃபிளாட் செப்பல்கள் பயன்படுத்தலாம். ஜீன் பேன்ட், ¾ பேன்ட் இதுக்கெல்லாம் டெனிம் ஸ்னீக்கர் அல்லது ஷூக்கள் பயன்படுத்தலாம்.

டெனிம் பூட்ஸ்கள் பழக்கம் இல்லாம போட்டுக்கொள்ள முடியாது. சரியான ஹீல் பழக்கம் இல்லைன்னா ஃபிளாட் அல்லது மீடியம் ஹீல் செப்பல்களுக்குப் போவதே நல்லது. சுலபமா மெயின்டெயின் பண்ணலாம். எல்லாரையும் பளிச்சுனு ஈர்க்கும் பெர்சனாலிட்டி டெவெலப்மென்ட் கிளாஸ் போனா உங்களுடைய செருப்புக்கள்தான் உங்களை பிரதிபலிக்கும்னு சொல்லி, நல்ல காலணிகள் அணிவது முக்கியம்னு முதல்ல சொல்லிக் கொடுப்பாங்க. காலணிகளை அதிகம் விரும்புகிற மக்களுடைய சாய்ஸ் இந்த டெனிம்கள்தான். காரணம் சாதாரண வெட்ஜ் செருப்புகளே குறைந்தபட்சம் ரூ.600 கொடுத்தாதான் வாங்க முடியும். அப்போ பூட்ஸ்கள் விலையெல்லாம் எவ்வளவு இருக்கும்னு நீங்களே கணக்கிடுங்கள். ரூ.2000க்குக் குறைந்த விலையில் பூட்ஸ்களே கிடையாது, இதில் டெனிம் பூட்ஸ் விலை இன்னும் அதிகமாகும்.

இதனாலேயே இந்த பூட்ஸ்கள் சாதாரண செருப்புக் கடைகளில் கிடைப்பதில்லை. காரணம் ஆரம்பத்திலேயே சொன்னதுதான். ஸ்டேட்டஸைக் காட்டவே டெனிம் பூட்ஸ் டிக் செய்வாங்க என்பது. மேலும் டெனிம் பூட்ஸ்கள் போடும் போது கவனமா அதற்கான உடைகளை மேட்ச் செய்துக்கணும், இல்லைன்னா டிரோல்களுக்கு ஆளாகிடுவோம். ஒரு பெரிய செலிபிரிட்டியான ஜெனிபர் லோபஸ்க்கே கிண்டல்கள்தான் பரிசா கிடைச்சது. அப்போ நாம எவ்ளோ ஜாக்கிரதையா தேர்வு செய்யணும்னு யோசிச்சு வாங்குங்க. ஆனால் நீண்ட நாட்கள் உழைக்க ஒரு காலணி வேணும்னா அதை டெனிம் மெட்டீரியல்கள்ல தேர்வு செய்யலாம்” என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam