பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டுவார்கள்!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 21 Second

அயோத்தி விவகாரத்தில் பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டத் தொடங்குவார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது.

2014-ல் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா ஆகியவை வலியுறுத்தின.

இதைத்தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு இந்து அமைப்புகள் நாளை அயோத்தியில் மிகப்பிரமாண்ட பேரணி நடத்தவுள்ளன.

இந்நிலையில், வாரணாசியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், அயோத்தி விவகாரத்தில் பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டத் தொடங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டத் தொடங்குவார்கள். அப்படி மக்கள் முடிவெடுத்து கட்டுவதால் மத ஒருமைப்பாடு குலைந்துவிடும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?(கட்டுரை)
Next post யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!!